அருள்மிகு ஓம் சர்வ சக்தி விநாயகர் திருக்கோயில் தல வரலாறு: வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டின் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரின் திருமுகமாய் திகழ்வது திருமயிலையாகும். பழம் பெருமை வாய்ந்த மயிலாப்பூரில் இராதாகிருஷ்ணன் நெடுஞ்சாலையில் கல்யாணி மருத்துவமனைக்கு அருகாமையில் அமைந்துள்ளது அருள்மிகுஓம் சர்வ சக்தி விநாயகர் திருக்கோயிலாகும்.