சனிக்கிழமைகளில் இப்படி விரதம் இருந்து, இந்த தெய்வங்களை வழிபட்டாலே போதும். சகல தோஷங்களும் நீங்கி, சவுகரியமான வாழ்க்கையை பெற்றுவிடலாம்.
பொதுவாகவே சனிக்கிழமைகளில் சில நல்ல காரியங்களை நடத்தக்கூடாது என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் வாரம்தோறும் வரும் சனிக்கிழமை அன்று விரதமிருந்து வேண்டுதல் வைத்து, சில தெய்வங்களை வழிபாடு செய்து வந்தோமேயானால் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களேக்கு சீக்கிரமே விடிவுகாலம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாம் எல்லோரும் அறிந்தது, சனிக்கிழமை என்றால் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்தது என்பது தான். ஆனால் அப்படி அல்ல. சனிக்கிழமைகளில் விநாயகரையும் வழிபாடு செய்யலாம் அனுமனையும் வழிபாடு செய்யலாம். ஐயப்பனையும் வழிபாடு செய்யலாம். விநாயகர் ஐயப்பன் ஹனுமன் இந்த தெய்வங்கள் அல்லாமல் உங்களுக்கு இஷ்ட தெய்வமாக வேறு ஏதாவது ஒரு தெய்வங்கள் இருந்தாலும் அந்த தெய்வங்களை நினைத்து சனிக்கிழமை அன்று விரதமிருந்து வழிபாடு செய்தால் அந்த வழிபாட்டின் மூலம் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். தீராத உடல் உபாதைகளால் அவதி பட்டு கொண்டிருப்பவர்கள், தீராத மன கஷ்டம் உடையவர்கள், தீரா பணக்கஷ்டம் உடையவர்கள், வீட்டில் சுப காரியம் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருபவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஜாதகத்தி...