திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நிகழும் மிக முக்கியமான நிகழ்வு. ஒரு ஆணும் , பெண்ணும் இணைந்து இல்லற வாழ்க்கையை மேற்க்கொள்ள நடத்தப்படும் ஒப்பந்தமே திருமணம். ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண பொருத்தம் இருக்கிறதா என்று பார்ப்பதே திருமணத்தின் முதல் படி. திருமண பொருத்தம் இருந்தால் மட்டுமே அடுத்தகட்ட திருமண வேலைகள் தொடங்குவார்கள். திருமண பொருத்தம் திருமண பொருத்தம் என்றால் என்ன? திருமணத்திற்கு முன், ஆண் பெண் இருவருக்கும் ராசி, நட்சத்திரம், பெயர்கள் ஜோதிட ரீதியாக 12 பொருத்தம் இருக்கிறதா என்று பார்ப்பதே திருமண பொருத்தம். முக்கியமாக சில பொருத்தங்கள் இருக்கிறது, அவை இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படும். 12 திருமண பொருத்தங்கள்: தினப் பொருத்தம் கணப்பொருத்தம் மாகேந்திரப் பொருத்தம் ஸ்திரீ தீர்க்கம் யோனிப் பொருத்தம் இராசிப் பொருத்தம் இராசி அதிபதி பொருத்தம் வசியப் பொருத்தம் ரஜ்ஜிப்பொருத்தம் வேதைப் பொருத்தம் நாடிப் பொருத்தம் விருட்சப் பொருத்தம்