பிலவ வருடம் 2021 தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் - மிதுன ராசி அன்பர்களே! சித்திரை மாத பிறப்பு அன்று உங்கள் ராசிக்கு அதிபதி புதன் உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான மீனத்திலும் உங்கள் ராசிக்கு 2க்கும் மூன்றுக்கும் அதிபதியான சந்திரனும் சூரியனும் 11ம் இடத்திலும் உங்கள் ராசிக்கு புண்ணிய ஸ்தானத்திற்கும், விரய ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரன் அதே பதினோராம் இடமான லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள். மேலும் எட்டாமிடத்தில் சனி பகவான், 9-ம் இடத்தில் அதிசாரமாக வந்த குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பது என கிரகங்களின் அமைப்பு மிகச் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அஷ்டம சனியின் பாதிப்பு இந்த குருபகவானின் பார்வையால் நிச்சயமாக வெகுவாகக் குறையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அது மட்டுமில்லாமல் இரண்டாம் அதிபதி சந்திரன் லாபஸ்தானத்தில் இருப்பதும், உங்கள் முயற்சிகளுக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய சூரியபகவான் உச்சமாக இருப்பதும் உங்களுடைய அனைத்து செயல்களிலும் வெற்றியைத் தருவதற்கு எந்தவித தடைகளும் இருக்காது என்பதை உறுதியாக நம்பலாம். எடுக்கின்ற முயற்சிகள் மட்டுமல்லாமல் எடுக்காத முயற்சிகளில் கூட உங்கள...