துலாம் ராசி அன்பர்களே : சார்வரி தமிழ் புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்களாகிய நீங்கள் நிறைய சவால்களை எதிர்கொள்வீர்கள், ஆனாலும் துணிச்சலாக நீங்க எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். இதுவரை இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமானதாக முடியும். யாரிடமும் வம்பு வழக்குகள் வீண் வாக்குவாதங்கள் என்பவற்றை தவிர்க்கவும். இந்த ஆண்டு சொத்துக்கள் வாங்கும் யோகம் தேடி வரும். சிலருக்கு புதிய பதவிகள் சம்பள உயர்வு கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியாக அமையும். சில நேரங்களில் பெண்கள் குடும்ப வாழ்க்கையில் கசப்பான உணர்வுகளை சந்தித்தாலும் சில மாதங்களில் அவை நீங்கும். வியாபாரத்தில் பண வரவுகள் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக அமையும். மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறைவடையும். பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற முதலீடுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். துலாம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை துலாம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்: லட்சுமி நரசிம்மர...