திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாதம் தோறும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதியையும், அதற்கான நாளையும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச தரிசன டோக்கன்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு புதிய நடைமுறையும் அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக நாடே முடங்கி கிடந்த நிலையில், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இந்த நிலையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் தினமும் 50 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இலவச தரிசன டோக்கன்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. தினமும் அதிக பக்தர்களால் வழிபடக்கூடிய முக்கிய கோயிலாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. கொரோனாவால் முடங்கி இருந்த சூழல் மாறி வருவதால் தற்போது தினமும் 50,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்ய அனு...