மாமலை சபரியிலே மணிகண்டன்: Maamalai Sabariyile Manikandan Sannithaanam Lyrics in Tamil மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம் மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சந்நிதானம் கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சந்நிதானம் பூமகன் மைந்தனின் புண்ணிய சந்நிதானம் பதினெட்டு படிமீது விளங்கிடும் சந்நிதானம் விதியையும் மாற்றி வைக்கும் வீரனின் சந்நிதானம் கவலையைப் போக்கிடும் கணபதி சந்நிதானம் அவனியைக் காத்திடும் ஐயப்பன் சந்நிதானம் நாகரின் சந்நிதானம் வாவரின் சந்நிதானம் நாளெல்லாம் நம்மையென்றும் காப்புக்காக்கும் சந்நிதானம் மாளிகை புறத்தம்மனின் மனங்கவர் சந்நிதானம் நாளெல்லாம் நம்பிக்கை ஒளிவீசும் சந்நிதானம் சந்நிதானம் ஐயப்பன் சந்நிதானம்.. சந்நிதானம் … ஐயப்பன் சந்நிதானம்