Skip to main content

Posts

Showing posts with the label ரிஷப ராசி சனி பெயர்ச்சி 2020 – 2023

ரிஷப ராசி சனி பெயர்ச்சி 2020 – 2023

 ரிஷப ராசிக்கு 9ம் இடமான பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்கிறார். பாக்கிய ஸ்தானம் என்பதால் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள், பிரச்னைகள் தீரும். குடும்ப பிரச்னை தீர்ந்தால் மன நிம்மதியும், ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ராகு ராசியில் அமர்ந்து சிறப்பான பலனைத் தரக்கூடிய நிலையில், குருவும் தனது 5ம் பார்வையால் ரிஷப ராசிக்கு நற்பலன்களை வாரி வழங்குவார் என்பதால் மிக சிறப்பான யோகங்களை ரிஷப ராசியினர் பெறுவார்கள். சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி பொருளாதார நிலை உயரும் என்பதால், கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். மேலும் வீடு, மனை போன்ற அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய அற்புத காலமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு போன்ற தூர தேசம் இடங்களுக்கு செல்ல உகந்ததாக இருக்கும். அதே சமயம் ராசிக்கு 3ம் இடத்தில் சனியின் பார்வை விழுவதால், சகோதரர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.