Skip to main content

Posts

Showing posts with the label அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில்

அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004

அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில் தல வரலாறு:  திருக்கோயிலின் தோற்றம் :  திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடபுறமும் , அருள்மிகு மாதவ பெருமாள் திருக்கோயிலுக்கு மேற்கும் முண்டகக்கண்ணியம்மன் தெரு எனத் தொன்று தொட்டு முண்டகக்கண்ணியம்மன் பெயரில்; அழைக்கப்படும் தெருவில் இத்திருக்கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக அம்பாள் தோன்றியதுடன் சுயம்பான அருவுருவ தோற்றத்தின் மேல் பகுதி தாமரை மொட்டு வடிவிலும் சுயம்புவின் முகப்பு தோற்றத்தில் அமைந்து நடுப்பகுதியில் திரிசூலம் பதிக்கப்பட்டுள்ளது .தாமரையின் இன்னொரு பெயர் `முண்டகம் ` என்பதால் மக்கள் இந்த அம்மனை முண்டகக்கண்ணியம்மன் என்று அழைக்கின்றனர். அம்மனின் பின்புறம் பெரிய புற்றிலிருக்கும் நாகம் நாளும் அம்பாளை வழிபட்டு வந்ததால் அம்பாளுக்கு ஓலைக் கூரை அமைக்கப்பட்டதாக வழிவழிச்செய்தி உள்ளது .வெப்பத்தினைத் தானே தாங்கி மக்களுக்கு குளிர்ச்சியை அளிக்க ஓலைக்கூரையில் தங்கி அருள் பாலிக்கிறாள்.    நாகம் வழிபடுதல் மூலவர் அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் பின்புறம் நாகப்புற்றும் குரு ஆலமரமும் உள்ளது.நாகம் இரவில் அம்மனை வழிபட...