வாருங்கள் எல்லோரும் வாருங்கள்: Vaarungal Ellorum Vaarunkal Sabarimalaike Lyrics in Tamil வாருங்கள் எல்லோரும் வாருங்கள் சபரிமலைக்கே ஹரிஹர சுதனைக் காணவே வாருங்கள். மண்டல விரதமுடன் வாருங்கள் மணிகண்டன் சந்நிதானம் பாருங்கள் நெய்மணக்கவே வீற்றிருக்கும் எங்கள் ஐயப்ப சாமியை நாடுங்கள் தையினில் அய்யன் அருளைப் பெறவே சந்ததம் நீங்கள் பாடுங்கள் (வாருங்கள்) அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பான் அய்யன் ஐந்து மலைகளிலே அமர்ந்திருப்பான் மண்ணவர் விண்ணவர் போற்றும் தெய்வம் அம்பிகை அருளும் அன்புச் செல்வம் எண்ணமதில் விளையாடும் இறைவன் கண்ணென நம்மைக் காக்கும் தெய்வம் (வாருங்கள்) பொன்னு பதினெட்டுபடி ஏறிச்செல்லுங்கள் கன்னிமூல கணபதியை வேண்டிக்கொள்ளுங்கள் நாகர், யக்ஷ, காளி கடுத்தை வாவரை தரிசனம் காணுங்கள் மாளிகைப்புறத்து மஞ்சம்மாவின் மலரடி நீங்கள் வேண்டுங்கள் (வாருங்கள்)