சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 28ஆம் தேதி அக்டோபர் 14ஆம் தேதி நாளைய தினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10.30 மணிவரை பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை மாலை 04.30 மணிவரை 6.50 மணிவரை பூஜை செய்யலாம். வழிபடும் முறை வீட்டை நன்கு சுத்தம் செய்த பின்னர் நாம் பயன்படுத்தும் அனைத்து உபகரணங்களுக்கும் விபூதி பட்டை போட்டு குங்குமம் வைத்து சந்தனம் தெளிக்க வேண்டும். பின் வீட்டின் வாயிலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். மாவிலை, தோரணம் கட்டி சரஸ்வதி தேவியை வரவேற்க வேண்டும். நம் வாகனங்களை சுத்தம் செய்து அவற்றிற்கும் பொட்டு வைத்து சந்தனம் தெளிக்க வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து பூஜை அறையில் உள்ள அனைத்து சுவாமி படங்களையும் அலங்காரம் செய்ய வேண்டும். சரஸ்வதி தேவியை வழிபடுவதிர்க்கு முன் முழுமுதர்க் கடவுளான வினை தீர்க்கும் விநாயகரை வழிபட வேண்டும். பூஜை அறையில் முதலில் மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து குங்குமத்தில் பொட்டு வைத்து விநாயகருக்கு பூ, அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். குழந்தைகள் கல்வி கற்பதில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்....