Skip to main content

Posts

Showing posts with the label Tharamangalam Kailasanathar Temple

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், சேலம் மாவட்டத்தில் உள்ள  பழமையான சிவன் கோயிலாகும். இக்கோவில் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கு புகழ் பெற்றக்கோவில். இத்தலத்தில் மூலவர் கைலாசநாதர் , தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள் . தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் இக்கோவில் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. கோவில் நுழைவாயில் உள்ள கதவுகள் வேங்கை மரத்தினால் ஆனது.  அதில் துருப்பிடிக்காத ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளது.  இக்கதவுகளில் பெருமாள் சிலைகள் தத்துரூபமாக செதுக்கப்பட்டு பட்டுள்ளது.  இந்த கோயில் 5 அடுக்கு ராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. கோவில் உள்ளே சென்றதும் நந்தியார் சிலையும் , பலிபீடமும் உள்ளது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிவகாமியம்மன், நவகிரகங்கள், முருகன், தாண்டவ மூர்த்தி, வீரபத்திரர், பைரவர், விநாயகர், உமா தேவி, சனீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு தனி கோவில் உள்ளது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிறப்பு: மாசிமாதம் 9, 10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண ஏராளமான மக்கள் அன்றைத்தினம...