கடக ராசி அன்பர்களே! தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இந்த மாதம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும், உடனே நீங்கிவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்த்துவிடுவீர்கள். மாத முற்பகுதியில் வீடு, நிலம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க் கைக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். அவருடைய தேவையை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். இழுபறியாக இருந்த அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். இளைய சகோதரர்களால் உதவியும் உற்சாகமும் உண்டு. தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அரசின் சலுகை, வங்கிக் கடன் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக...