கன்னி ராசியின் அதிபதி புதன் பகவானாவார். கன்னி ராசியில் உத்திரம் 2, 3, 4ம் பாதங்களும், அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தின் 1,2, பாதங்கள் ஆகியவை அடங்கும். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை எடை போட முடியாது. தங்களை இளமையாக வைத்து கொள்ள விரும்புவார்கள். கன்னி ராசி ஆண் குழந்தை/பெண் குழந்தை: உத்திரம் (பாதம் 2,3,4) - TO, PA, PI (டோ,ப, பி) அஸ்தம் - PU, SHA, NA, TA (பு, பூ, ஷ, ந, ட) சித்திரை (பாதம் 1,2) - PE, PO, RA, RI (பே,போ, ர,ரி) கன்னி ராசிகாரர்கள் எதிலும் அவசரபடாமல் நிதானமாக செய்யக்கூடியவர்கள். இவர்கள் மகிழ்ச்சியாக இருபதையே விரும்புவார்கள். யாரையும் புண்படுத்தும்படி பேச மாட்டார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொள்ள கூடியவர்கள். இவர்கள் வசீகரமான தோற்றத்தை கொண்டவர்கள். கூடவே ன்னனடதையும் உள்ளவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் எதிரிகளே இருக்க மாட்டார்கள். தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள். இவர்கள் பேச்சாற்றலும், அறிவாற்றலும் ஒருங்கே கொண்டவர்கள். தன்னை தாழ்த்தி கொண்டு பிறரை உயர்த்தும் குணம் கொண்டவர்கள். இவர்கள் சுகமாக...