கடகம் ராசி அன்பர்களே : கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு சார்வரி தமிழ் புத்தாண்டு முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமைகிறது. அதிகாரம் மற்றும் பதவிகள் கிடைக்கும். உங்களுக்கு நல்ல மதிப்புகள் மரியாதை தேடி வரும். அரசஅதிகாரிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். அரசு வேலைக்கு முயற்சிகள் செய்தால் கண்டிப்பாக வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு அதிக சம்பளத்துடன் உயர்வு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் விலகி நல்ல நிலை ஏற்படும். குரு பார்வையால் இந்த ஆண்டு சந்தோசமாக இருப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளினால் வீடு களைகட்டும். திருமண தடைகள் நீங்கி விரும்பிய வாழ்க்கை தேடி வரும். ஆண்டின் தொடக்கத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது சிறந்தது. மொத்தத்தில் சார்வரி தமிழ் புத்தாண்டு மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமைகிறது. கடகம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் கடக ராசிக்கு அதிர்ஷ்டமான மாதங்கள்: புரட்டாசி, மார்கழி, பங்குனி கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்: சிவன் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நாள் : திங்கள்