சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும். Sivanmalai Subramaniyar Temple சிவன்மலை சுப்பிரமணியர் கோவில் அமைவிடம் : காங்கயத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் சிவன்மலை மீது அமைந்துள்ளது. இக் கோயிலின் அஞ்சல் முகவரி: அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில், சிவன்மலை, காங்கயம் வழி, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு -638701. அருகிலுள்ள பேருந்து நிலையம்: காங்கயம்; அருகிலுள்ள ரயில்நிலையம்: திருப்பூர்; வானூர்தி நிலையம்: கோயம்புத்தூர். சிவன்மலை மீதுள்ள கோயிலை நடைப்பயணமாக அடைய 496 படிகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம் கோயிலுக்குச் செல்ல தனிப்பாதை உள்ளது. கோவில் நிர்வாகத்தாரால் மலை மீதுள்ள கோயிலுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களிலும் செல்லலாம். சிவன்மலை சுப்பிரமணியர் கோவில் பெயர்க்காரணம்: சிவவாக்கியம் எனும் நூலை இயற்றிய சிவவாக்கியர் சித்தர் சிவன் மலையில் தங்கி தமது விருப்பதெய்வமான முருகப்பெ...