Skip to main content

Posts

Showing posts with the label தனுசு ராசி சார்வரி வருட ராசிபலன் 2020

தனுசு ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்

தனுசு ராசி அன்பர்களே : இந்த சார்வரி புது வருடம் தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசியிலேயே பிறக்கிறது. உங்களுக்கு வேலைச்சுமை அதிகரித்து காணப்படும். உங்களுடைய பொறுப்புக்களை யாரையும் நம்பி ஒப்படைக்காதீர்கள். ஏழரை சனி காலம் என்பதால் ஒருவிதமான பதற்றம் இருந்துகொண்டே இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். அடிக்கடி கோபப்பட்டுக்கொண்டிருந்த மன நிலை மாறி உங்க கோபம் படிப்படியாக குறையும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் வரும் சிலருக்கு எதிர்பார்த்த பணம் வரும் சில நேரங்களில் எதிர்பாராத பணமும் வரும். எதிரிகள் பிரச்சினைகள் விலகும். ப‌டிப்படியாக உங்க பிரச்சினைகள் அனைத்தும் விலகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் வருவாய் கிடைக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். சாதனைகள் நிறைந்த ஆண்டாக சார்வரி புது வருடம் உங்களுக்கு பிறக்கப் போகிறது. தனுசு ராசிக்கு அதிர்ஷ்டமான மாதங்க