தனுசு ராசி அன்பர்களே :
- இந்த சார்வரி புது வருடம் தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசியிலேயே பிறக்கிறது. உங்களுக்கு வேலைச்சுமை அதிகரித்து காணப்படும். உங்களுடைய பொறுப்புக்களை யாரையும் நம்பி ஒப்படைக்காதீர்கள்.
- ஏழரை சனி காலம் என்பதால் ஒருவிதமான பதற்றம் இருந்துகொண்டே இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
- அடிக்கடி கோபப்பட்டுக்கொண்டிருந்த மன நிலை மாறி உங்க கோபம் படிப்படியாக குறையும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
- சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் வரும் சிலருக்கு எதிர்பார்த்த பணம் வரும் சில நேரங்களில் எதிர்பாராத பணமும் வரும். எதிரிகள் பிரச்சினைகள் விலகும். படிப்படியாக உங்க பிரச்சினைகள் அனைத்தும் விலகும்.
- குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் வருவாய் கிடைக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும்.
- சாதனைகள் நிறைந்த ஆண்டாக சார்வரி புது வருடம் உங்களுக்கு பிறக்கப் போகிறது.
தனுசு ராசிக்கு அதிர்ஷ்டமான மாதங்கள்:
சித்திரை, வைகாசி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசிதனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்:
குரு பகவான், ஆஞ்சநேயர்தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நாள்:
வியாழன்தனுசு ராசி சார்வரி வருட ராசிபலன்
Comments
Post a Comment