Skip to main content

Posts

Showing posts with the label அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்

அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005

 திருஅல்லிக்கேணியும் ஸ்ரீபார்த்தஸாரதி ஸ்வாமியும். `திரிந்துழஞ்சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப் புரிந்து புகன்மின் புகன்றல் - மருந்தாம் கருவல்லிக்கேணி யாமாக்கதிக்குக் கண்ணன் திருவல்லிக்கேணி யான்சீர்` - பிள்ளை பெருமாளய்யங்கார் - `நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி` திருஅல்லிக்கேணி என்றும் தற்காலம் திருவல்லிக்கேணி என்று வழங்கப்பட்டும் வரும் ஸ்தலத்திற்கு `ஸ்ரீ ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம்`- அதாவது துளஸிவனம், என வட மொழியில் பெயர். இந்த திவ்ய தேசம் தற்காலம் சென்னை நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இது ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் செய்யப்பெற்ற நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகி, ஸ்ரீபேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கைமன்னன் மூவர்கள் பன்னிரண்டு பாசுரங்களால் சிறப்பிக்கப்பட்ட க்ஷேத்ரம். இந்த திருக்கோயில், சென்னை ஸென்டரல் ஸ்டேஷனுக்கும், எழும்பூர் ஸ்டேஷனுக்கும் தென்கிழக்கில் சுமார் இரண்டு மைல் தூரத்தில் ரமணீயமான ஸமுத்ர கரைக்கு அருகாமையில் திருமங்கை மன்னன் மங்களாஸாஸனம் செய்தபடி `வாவியும் மதிலும் மாடமாளிகையும், மண்டபமும்` கூடிய லக்ஷ்மீகரம் பொருந்திய திருவல்லிக்கேணி என்னும் பகுதியில் ஸன்ன...