சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவானாவார். சிம்ம ராசியில் மகம், பூரம், உத்திரம் நட்சத்திரத்தின் 1ம் பாதம், ஆகியவை இதில் அடங்கும். சிம்ம ராசிக்காரர்கள் அழகான அங்க அடையாளங்களை கொண்டிருப்பார்கள். பேச்சிலும், நடவடிக்கைகளிலும் ஒரு வித கம்பீரம் இருக்கும். சிம்மம் ராசி ஆண் குழந்தை/பெண் குழந்தை மகம் - MA, MI, MU, ME (ம, மி,மு, மெ) பூரம் - MO, TA, TI, TU (மோ,ட, டி,டு) உத்திரம் (பாதம் 1) - TE (டே) சிம்ம ராசிக்காரர்கள் முன்கோபம் அதிகம் இருக்கும். எல்லா விஷயங்களிலும் வேகமாக செயல்படுவார்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்கள் ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டால் அதை மாற்றி கொள்ள மாட்டார்கள். எந்த விஷயத்திலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் வீரமும், நெஞ்சு உறுதியும் அதிகம் கொண்டவர்கள். எதற்கும் அஞ்சாத பேர்விழிகள். அன்பு, பணிவு, மரியாதை அனைத்தையும் ஒரு சேர கொண்டவர்கள். இவர்கள் எதிரிகளை கூட மன்னிப்பார்கள், ஆனால் துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள். இவர்கள் பேச்சில் ஒரு தெளிவு இருக்கும். இவர்களில் பெரும்பலனோர்க்கு பண வசதிக்கு குறைவு இருக்காது. இவர்கள் தற்புகழ்ச்சி உடையவர...