கன்னி ராசி அன்பர்களே : கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ் புத்தாண்டானது சுகமான ஆண்டாக பிறக்கிறது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள் பிரச்சனைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். பெண்களுக்கு பணம் மற்றும் நகை சேரும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் உங்களின் திறமை வெளிப்படும் அதுவே உங்க புரமோசனுக்கு வழிவகுக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்க ஆரோக்கியம் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். உங்க வீட்டில் சுப காரியங்கள் நிகளும். கணவன் மற்றும் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உங்களுக்கு பண பற்றாக்குறை நீங்கும். குரு பகவான் அதிசாரமாக ஐந்தாம் வீட்டில் இருப்பதால் மன இறுக்கம் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சிலருக்கு திருமணம் கை கூடி வருவதோடு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும். இதுவரை இருந்த கடன்களை கொடுத்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம் அதனால் கவனமாக இருங்கள். பணம் ஒர...