கன்னி ராசி அன்பர்களே! குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அடுத்தடுத்து தொடர்ந்து வந்த பிரச்னைகள் தீர்ந்து மனம் நிம்மதியடையும். காரியங்களில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகி, காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தவறான நண்பர்களைப் புரிந்து கொண்டு விலகிவிடுவீர்கள். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் தவற்றை உணர்ந்து மீண்டும் வந்து பேசுவார்கள். சகோதர வகையில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். ஆனால், உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். மாதப் பிற்பகுதியில் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். பணியாளர்கள் ஏனோ தானோ என்று வேலை பார்ப்பா...