சிலருக்கு திருமணத்தில் தடை ஏற்படும். எத்தனை வரன் பார்த்தாலும் அமையவே அமையாது. காரணம் பிறப்பு ஜாதகத்தில் தோஷம் ஏற்படும் வகையில் கிரகங்களின் சஞ்சாரம் இருக்கும். செவ்வாய் தோஷம் மட்டுமல்ல களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், ராகு கேது தோஷம் என பல அமைப்புகள் திருமண தடையை ஏற்படுத்தும். ஜாதகத்தில் உள்ள தோஷத்திற்கு ஏற்ப பரிகாரங்கள் செய்தால் கெட்டிமேளச்சத்தம் கேட்கும் முந்தானை முடிச்சு போடும் நேரம் தேடி வரும். ஒரு ஜாதகத்தில் இளமையில் திருமணம் காலதாமதம் இல்லாமல் நடைபெறும் என்பதற்கான ஜோதிட விதிகள் உள்ளன. அதன்படி 2,7,8ம் வீடுகள் சுபர் பார்வை பெற்றிருக்க வேண்டும். 2,7,8ம் வீடுகளில் பாபக்கிரகங்கள் இடம் பெற்றிருக்கவோ, பாவிகள் சேர்க்கையோ இருக்கக் கூடாது. 7ம் இடத்துக்குரிய அதிபர் நீசம், மறைவு ஸ்தானங்கள் பெறக்கூடாது. பகை வீடு சேராமலும் இருக்கவேண்டும். லக்னத்தை சுபகிரகம் பார்க்க வேண்டும் அல்லது லக்னத்தில் சுபக் கிரகம் இருக்க வேண்டும். 7வது இடத்து அதிபதியோ அல்லது சுக்ரனோ, சுக்ரன் நின்ற ஸ்தானாதிபதியோ ஆட்சி, உச்சம், பெற்று சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலோ திருமணம் மனதுக்குப் பிடித்தவாறு கால...