அருள்மிகு தர்மராஜா திருக்கோயில் தல வரலாறு: மகாபாரதத்தை இந்தியாவின் இதிகாசமாகப் போற்றப்பட்டாலும் தமிழகத்திலே மகாபாரதக்கதை மாந்தர்களாகப் போற்றப்படும் பஞ்ச பாண்டவர்களும், பாஞ்சாலி திரௌபதியம்மனும் கிராம தேவதைகளாகப் போற்றி வணங்கப்படுவது தம் தமிழகத்தின் பண்பாடு. அப்படி கிராம தெய்வமாக தர்மராஜா திருக்கோயில் விளங்குகிறது. இங்கு தர்மர், பீமர், அர்ச்சுனர், நகுலர், சகாதேவர் இவர்களுடன் திரௌபதியம்மன் போன்ற மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.