Skip to main content

Posts

Showing posts with the label Ayyappaa songs Lyrics in Tamil

Aakasamam Pulli Pulimel Bavaniyai Song Lyrics in Tamil

ஆகாசமாம் புள்ளி புலிமேல்: Aakasamam Pulli Pulimel Bavaniyai Song Lyrics in Tamil ஆகாசமாம் புள்ளி புலிமேல் பவனியாய் ரோகாதி மாற்றிடும் சுவாமி (ஆகாசமாம்) கபடமாம் ரூபத்தின் தலைவேதனைக்கவன் தருமருந்து புலிப்பாலு (கபடமாம்) தரணிக்கு தன்வந்த்ரி ஞானமூர்த்தி (ஆகாசமாம்) அறியாத தீவினை பாவச்சுவடாகி மனிதரை வாட்டிடும் ஜென்மம் அறியாத தீவினை பாவச்சுவடாகி மனிதரை வாட்டிடும் ஜென்மம் ஐயன் கடைக்கண்ணால் நம்மை காத்திடும் நல்லவன் பாரோரால் போற்றிடும் ரூபனாம் ஐயன் கடைக்கண்ணால் நம்மை காத்திடும் நல்லவன் தீதான ஆணவத்தின் ரூபனாய் மகிஷி மர்தனன் செய்தான் அன்பு மனிதாபிமானமுள்ள தெய்வம் (மகிஷி) சமதர்மத்தின் ரூபமே சரணம் (ஆகாசமாம்) கேட்டு நடுங்கிடும் வன் கோரரூபங்களை வேட்டையாடி நமை காக்கும் சுவாமி கேட்டு நடுங்கிடும் வன் கோர ரூபங்களை வேட்டையாடி நமை காக்கும் சுவாமி நவசக்தி மணி வில்லின் நாணொளி கொண்டவன் நாட்டின் நலம் காக்கும் சுவாமி நவசக்தி மணிவில்லின் நாணொளி கொண்டவன் நாட்டின் நலம் காக்கும் சுவாமி சத்ய தர்மமதை குடிவைக்க வந்தவன் சானித்ய மூர்த்தியே சரணம் சத்ய தர்மமதை குடிவைக்க வந்தவன் சானித்ய மூர்த்தியே சரணம் அருள் நித்திய சொரூபமே

Sanathiyil Kattum Katti Ayyappa Song Lyrics in Tamil

சன்னதியில் கட்டும் கட்டி… வந்தோமப்பா ஐயப்பா: Sanathiyil Kattum Katti Ayyappa Song Lyrics in Tamil சுவாமியே… சரணம்… ஐயப்போ. இருமுடிப்ரியனே… சரணம்… ஐயப்போ… எங்கள்… குல… தெய்வமே… சரணம்… ஐயப்போ. சன்னதியில் கட்டும் கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… சபரிமலை காடுதேடி… வாரோமப்பா ஐயப்பா… கட்டுமுடி ரெண்டு கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதிகாண… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையாவந்து சேரப்பா… குருசாமி காலைத்தொட்டு… வந்தோமப்பா ஐயப்பா… கூடியொரு சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா… புலியேறும் உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா… புல்லரிக்க சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதியானவா… எங்க காவலாக வந்து சேரப்பா… (சன்னதியில் கட்டும் கட்டி.) கார்த்திகையில் மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா… கனிவாக விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… மணி மணியா மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா… மார்கழியில் பூசை வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா… குருசாமி சொன்னபடி… வந்தோமப்பா ஐயப்பா… கூடி நல்ல விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… கருப்பசாமி உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா… கால மால

Villeduthu Vilaiyadum Deivame Bakthar idaymam Song Lyrics in Tamil

 வில்லெடுத்து விளையாடும்: Villeduthu Vilaiyadum Deivame Bakthar idaymam Lyrics in Tamil வில்லெடுத்து விளையாடும் தெய்வமே – பக்தர் இதயமாம் நீலவானில் – மன வில்லெடுத்து தத்துவம் சொன்னவனே பலநிறம் சேர்ந்து தான் மனவில்லென்பது மன ஒற்றுமை ஒன்றுதான் ஜெயமந்திரம் ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா (வில்லெடுத்து) உடல் தந்தாய் உயிர் தந்தாய் அறிவும் தந்தாய் உதவாத ஆணவத்தை ஏனோ தந்தாய் உடல் தந்தாய் உயிர் தந்தாய் அறிவும் தந்தாய் உதவாத ஆணவத்தை ஏனோ தந்தாய் அளவில்லா ஆசைகளை மணிகண்டா நீ அளவில்லா ஆசைகளை மணிகண்டா நீ – எங்கள் குறை நீக்கிடு ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா (வில்லெடுத்து) கல்லாகும் சொல்லாலே மனிதரை வாட்டும் நல்வழி செல்லா மனமும் சினத்தைக் கூட்டும் கல்லாகும் சொல்லாலே மனிதரை வாட்டும் நல்வழி செல்லா மனமும் சினத்தைக் கூட்டும் இனி உன்னருளாலன்றோ மனிதரின் நிலை இனி உன்னருளாலன்றோ மனிதரின் நிலை இங்கு நீ தீமைகளை கொய்திடுவாய் ஐயா சரணம் ஐயப்பா ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா (வில்லெடுத்து)

Kaasi Naathanai Vananginaen Illai Kailaasam Than Song Lyrics in Tamil

 காசிநாதனை வணங்கினேனில்லை : Kaasi Naathanai Vananginaen Illai Kailaasam Than Lyrics in Tamil காசிநாதனை வணங்கினேனில்லை கைலாசம் தான் போகினேன் நானில்லை விஷ்ணு மகேஷ்வர புத்ர தரிசனத்தால் விஷ்ணு மகேஷ்வரன் பாதம் அடைந்தேன் (காசி) குளத்துப்புழையில் குமாரரூபத்தோடும் ஆரியங்காவில் நவயோவனத்தோடும் அச்சங்கோவிலில் இல்லறத்தானாகவும் ஆரண்ய கேத்ரங்களில் உன்னைக் கண்டேன் என்றாலும் நித்திய பிரம்மச் சாரியாய் உன்னைக் காண சபரிமலை வந்தேன் உன்னைக் காண சபரிமலை வந்தேன் (காசி) வனாந்தரங்களில் பஞ்சபூதத்தையும் பம்பாதீரத்தில் மூலகணபதியையும் பொன்னம்பல மேட்டில் அதிர்ஷ்ய சாஸ்தாவையும் வாழ்த்தி வணங்கி கைகூப்பி நின்றேன் என்றாலும் கருணைக்கடலாம் உன்னைக் காணவே சன்னிதி நான் வந்தேன் காணவே சன்னிதி நான் வந்தேன் (காசி)

Saranguththi Aalae Nee Song Saatchi in Tamil

 சரங்குத்தி ஆலே நீ சாட்சி: Saranguththi Aalae Nee Saatchi in Tamil சரங்குத்தி ஆலே நீ சாட்சி -சபரி பீடமே நீ சாட்சி தஞ்சம் என்றோர்க்கு தாயினும் சிறந்தவன் தாரகப் பிரம்மமே ஐயப்பா – சுவாமி ஐயப்பா (சரங்) சூர்ய வில்லினை தோளில் அணிந்தவன் தூளியாலே அம்புகள் எய்தும் மனசாம் கொடும் காட்டில் வேட்டையாடிட சுவாமி மணிகண்டன் மகிமை பொன்சரம் தொடுத்தான் மனசாம் கொடும் காட்டில் வேட்டையாடிட சுவாமி மணிகண்டன் மகிமை பொன்சரம் தொடுத்தான் கரிபுலி நரிகளாம் காம குரோதங்களை பல திரை எய்து வீற்றிடவே – எந்தன் விழிகளில் ஐயனின் திருவுருவம் (சரங்) சந்திரனாம் வட்ட பரிசையணிந்து சந்தனம் பொட்டு பள்ளி பாலினில் தெளித்து சந்திரனாம் வட்ட பரிசையணிந்து சந்தனம் பொட்டு பள்ளி பாலினில் தெளித்து கனககேசரிகளாம் வாகனங்களில் ஐயன் கலியுக காடுதேடு வந்தானே இடி மின்னல் உருமிகள் துரத்திடும் சுவாமி இடி மின்னல் உருமிகள் துரத்திடும் சுவாமி – எந்தன் இருள் நெஞ்சில் வேட்டையாடினான் அன்றே இருள் நீங்கி அளிமயமானதே (சரங்)

Pavam Kalividum Pamba Song Lyrics in Tamil

 பாவம் கழுவிடும் பம்பா: Pavam Kalividum Pamba Lyrics in Tamil பாவம் கழுவிடும் பம்பா பாவம் அழித்திடும் பம்பா பாவ நாசினி பம்பா பூரண புண்ணிய நதி நீ பம்பா (பாவம்) புண்ணிய பம்பையில் மூழ்கிக் குளிக்காத பொன் காலை மாலைகள் உண்டோ உன் குளிர் நீரினால் பாவம் போக்காத முன்னோர் நினைவுகள் உண்டோ பம்பே பம்பே பாற்கடல் கூட உனக்குப் பின்பே பம்பா ஸ்நானம் பரமபவித்ரம் நாங்கள் செய்கின்றோம் பரமன் மைந்தன் பந்தள சபையின் உள்ளம் கனிகின்றான் (பாவம்) பழமை பழக்கம்போல் ஐயன் வரும்போது பரிமாற படையல்கள் உண்டோ உன் இதயத்தில் விளக்கொளி ஏற்றாத கார்த்திகை தாரகை உண்டோ பம்பே பம்பே பாற்கடல் கூட உனக்குப்பின்பே பம்பை படையலுக்கு ஐயன் வரணும் என்னுடன் சுவைக்கனும் பம்பை விளக்கைக்கண்டு மகிழ்ந்திட ஐயன் அருள் தரணும்

Pambaa Ganapathi Anbin Adhipathi Song Lyrics in Tamil

 பம்பா கணபதி அன்பின்: Pambaa Ganapathi Anbin Adhipathi Lyrics in Tamil பம்பா கணபதி அன்பின் அதிபதி நன்மை அருள்கின்றாய் அய்யன் மலை வரும் மாந்தரின் இனத்தை வாழ்த்திட நீயுள்ளாய் சாமி சோதரானாகின்றாய்-துயரினை நீக்கியே காக்கின்றாய் தடை என்ன வந்தாலும் உடைகின்ற தேங்காயாய் கடும் பக்தி விரதத்தால் அவையாகும். அருளெனும் சொல்லுக்கே பொருளாக ஆகின்ற அன்னையின் ரூபமே முன்னிற்கும்-கண்டு பூப்போல கைகளும் வணங்கி நிற்கும் திரேதாயுகம் கண்ட அவதார மாமன்னன் சீதாபதி ராமன் இருக்கின்றான் அழகிய ராமனின் அடிபோற்றும் மாருதி பக்தர்களின் ஒருவன்போல் நிற்கின்றான் என்றென்றும் மாறாத பக்திக்கு அருள்கின்றான்

Magishiyaik Kondravanae Ayyappaney Song Lyrics in Tamil

 மகிஷியைக் கொன்றவனே ஐயப்பனே: Magishiyaik Kondravanae Ayyappaney Lyrics in Tamil ஐயப்ப திந்தக தோம் தோம் சாமி திந்தகதோம் ஐயப்ப திந்தக தோம் தோம் சாமி திந்தகதோம் திந்தக திந்தக திந்தக தோம் தோம் மகிஷியைக் கொன்றவனே ஐயப்பனே மனசார நினைத்து ஆராதித்தேன் கன்னிசாமி கூட்டமும் குருசாமி கூட்டமும் பம்பை கொட்டி கைகள் தட்டி பேட்டை துள்ளி (ஐயப்பதிந்தக) வாபரின் பள்ளிதனில் காணிக்கை போட்டு வாபரைத் தம்முடைய துணையாய் வாழ்த்தி அம்பலப் புழை கிருஷ்ணனை சாட் வைத்து கூட்டம் தெப்பந்திருப் பார்ப்தோரு தொடங்கினோம் துள்ளல் (ஐயப்ப) சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே சாமி பாதம் ஐயப்ப பாதம் ஐயப்ப பாதம் சாமிபாதம் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பகவானே பகவதியே கற்பூரதீபம் சாமிக்கே -நெய்யபிஷேகம் சாமிக்கே அப்பனாம் சிவபெருமான் கண்கள் திறக்க உச்சிவேளை நட்சத்திரம் பூத்து விளங்க ஐயப்ப சாமியின் அபிஷேகம் பார்க்க ஆடிவரும் கூட்டம் மலையேறிச் சென்றோம் ஐயப்பதிந்தக தோம் சாமி திந்தகதோம் சாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் (மகிஷி)

Yellaa Thunbamum Theerthiduvai Song Lyrics in Tamil

 எல்லாத் துன்பமும் தீர்த்திடுவாய்: Yellaa Thunbamum Theerthiduvai Lyrics in Tamil எல்லாத் துன்பமும் தீர்த்திடுவாய் பொன் ஐயா சபரிவாசா (எல்லா) பொல்லா நோய்களும் நீங்கிடவே மலர்க்கையால் அருள்புரிவாய் – தேவா எம்மை ஆதரிப்பாய் (எல்லா) பாழாய் நாளைப் போக்காமல் உன் நாமம் நாவால் உரைப்போமே மாயாலோக வாழ்க்கையில் மதபேதப் பேய்கள் ஓட்டிடுவோம் போகம் தேடி அலைந்து திரிவோர் ஒரு கண சுகமென அறியாரே (எல்லா) கைகளும் கால்களும் தளர்ந்திடவே மனமதும் அவதியில் துடித்திடவே அகிலாண்டேசுவரா அபயம் நீ என்று அறிந்திட்டோம் நாங்கள் அழைக்கின்றோம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா (எல்லா)

Yenmanam Ponnambalam Song Lyrics in Tamil

 என்மனம் பொன்னம்பலம் : Yenmanam Ponnambalam Lyrics in Tamil என்மனம் பொன்னம்பலம் அதில் உனது எழில்ரூபம் எனது நாவில் உன் திருநாமம் புண்ய நைவேத்யம் (என்மனம்) கனவிலும் என் நினைவிலும் தினம் செய்யும் கடமையிலும் உனதுதீபம் ஒளியைக் காட்டும் கருணையே புரிவாய் அடியேன் நாடிடும் இனிய தெய்வம் சபரிமலை வாழும் அகிலாண்டேசுவரன் ஐயன் ஐயன் சரணம் ஐயப்பா (என்மனம்) பகலிலும் காரிருளிலும் மனக்கோயில் மூடேனே யுகம் ஓராயிரம் ஆயினும் யான் தொழுது தீரேனே இனி எனக்கொரு பிறவி வாய்ப்பினும் பூசை முடிப்பேனோ எளியோர்க்கு நீ மோட்சம் தாராய் தீணரக்ஷகனே (என்மனம்)

Annadhaana Prabhuve Saranam Ayyappa Ariyangkavil Ayyane Song Lyrics in Tamil

 அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா: Annadhaana Prabhuve Saranam Ayyappa Ariyangkavil Ayyane Lyrics in Tamil அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா .

Maamalai Sabariyile Manikandan Sannithaanam Song Lyrics in Tamil

 மாமலை சபரியிலே மணிகண்டன்: Maamalai Sabariyile Manikandan Sannithaanam Lyrics in Tamil மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம் மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சந்நிதானம் கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சந்நிதானம் பூமகன் மைந்தனின் புண்ணிய‌ சந்நிதானம் பதினெட்டு படிமீது விளங்கிடும் சந்நிதானம் விதியையும் மாற்றி வைக்கும் வீரனின் சந்நிதானம் கவலையைப் போக்கிடும் கணபதி சந்நிதானம் அவனியைக் காத்திடும் ஐயப்பன் சந்நிதானம் நாகரின் சந்நிதானம் வாவரின் சந்நிதானம் நாளெல்லாம் நம்மையென்றும் காப்புக்காக்கும் சந்நிதானம் மாளிகை புறத்தம்மனின் மனங்கவர் சந்நிதானம் நாளெல்லாம் நம்பிக்கை ஒளிவீசும் சந்நிதானம் சந்நிதானம் ஐயப்பன் சந்நிதானம்.. சந்நிதானம் … ஐயப்பன் சந்நிதானம்

Makaravilakku Kaattum Unakku Olimayamana Pathai Song Lyrics in Tamil

மகரவிளக்கு காட்டும் உனக்கு: Makaravilakku Kaattum Unakku Olimayamana Pathai Lyrics in Tamil மகரவிளக்கு காட்டும் உனக்கு ஒளிமயமான‌ பாதை ஐயன் இருக்க‌ கவலை எதுக்கு சரணமே உனக்கு கீதை ஐயன் சரணமே உனன்னு கீதை (மகரவிளக்கு) இருமுடி கட்டும் பஜனைப்பாட்டும் இணைந்தே உட‌ன்வரும்போது இருவினை ஒன்றும் செய்யாது ஐயப்பனின் படை சென்றிடும் வழியில் அங்கே வருவான் அன்போடு ஐயனும் கையில் அம்போடு (மகரவிளக்கு) படிகளில் ஏறும் பரவச‌ நேரம் வேறெதும் நினைவுகளேது நம்கவனம் எங்கும் செல்லாது அந்த பந்தள‌ ராஜனின் பாலகுமாரன் துணையாய் வந்திடும்போது துன்பங்கள் நம்மை அணுகாது (மகரவிளக்கு)

Ayyappan Naamam Enakku Jeeva Manthiram Song Lyrics in Tamil

 மந்திர கோஷப்பிரியனே சரணம் : Ayyappan Naamam Enakku Jeeva Manthiram Lyrics in Tamil ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் – அதை சொல்ல சொல்ல வாழ்வினிலே பேரின்பம் (ஐயப்பன் நாமம்) காடும் மலையும் கடக்கவைக்கும் ஐயப்பன் நாமம் களைப்பில்லாமல் நடக்க வைக்கும் ஐயப்பன் நாமம் பாடுவோர்க்கு பலனளுக்கும் ஐயப்பன் நாமம் பக்கத்துணையாயிருக்கும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்) தேனைப் போலத் தித்திக்கும் ஐயப்பன் நாமம் தெய்வ நலம் கூடவைக்கும் ஐயப்பன் நாமம் மோனத்தவ நலம் சேர்க்கும் ஐயப்பன் நாமம் முக்திதரும் சித்திதரும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்) சபரிமலை ஐயப்பா சஞ்சலத்தை மாற்றப்பா அபயம் தரும் ஐயப்பா ஆறுதலை அருளப்பா கருணை உள்ள ஐயப்பா கைகொடுத்து உதவப்பா அருள் உருவே ஐயப்பா ஆதரிப்பாய் ஐயப்பா (ஐயப்பன் நாமம்) Ayyappan Naamam Enakku Jeeva Manthiram Lyrics in Tamil

Vaarungal Ellorum Vaarunkal Sabarimalaike Song Lyrics in Tamil

 வாருங்கள் எல்லோரும் வாருங்கள்: Vaarungal Ellorum Vaarunkal Sabarimalaike Lyrics in Tamil வாருங்கள் எல்லோரும் வாருங்கள் சபரிமலைக்கே ஹரிஹர‌ சுதனைக் காணவே வாருங்கள். மண்டல விரதமுடன் வாருங்கள் மணிகண்டன் சந்நிதானம் பாருங்கள் நெய்மணக்கவே வீற்றிருக்கும் எங்கள் ஐயப்ப‌ சாமியை நாடுங்கள் தையினில் அய்யன் அருளைப் பெறவே சந்ததம் நீங்கள் பாடுங்கள் (வாருங்கள்) அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பான் அய்யன் ஐந்து மலைகளிலே அமர்ந்திருப்பான் மண்ணவர் விண்ணவர் போற்றும் தெய்வம் அம்பிகை அருளும் அன்புச் செல்வம் எண்ணமதில் விளையாடும் இறைவன் கண்ணென‌ நம்மைக் காக்கும் தெய்வம் (வாருங்கள்) பொன்னு பதினெட்டுபடி ஏறிச்செல்லுங்கள் கன்னிமூல‌ கணபதியை வேண்டிக்கொள்ளுங்கள் நாகர், யக்ஷ‌, காளி கடுத்தை வாவரை தரிசனம் காணுங்கள் மாளிகைப்புறத்து மஞ்சம்மாவின் மலரடி நீங்கள் வேண்டுங்கள் (வாருங்கள்)

Ayyappaa Swamy Kavacham in Tamil

  Ayyappaa Swamy Kavacham in Tamil கணபதி துதி அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே ஐங்கரனே அருள் புரிவாய். காப்பு ஹரிஹர புத்திரனை ஆனந்த ரூபனை இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை சபரி கிரீசனை சாந்த ஸ்வரூபனை தினம் தினம் போற்றி பணிந்திடுவோம் (அய்யப்ப தேவன் கவசம் இதனை அனுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும் தினம் தினம் துதிக்க தீரும் வினை எல்லாம் நாடிய பொருளும் நலமும் வருமே.) நூல் மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய மணிகண்ட தேவா வருக வருக மாயோன் மைந்தா வருக வருக ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக புலிவாகனனே வருக வருக புவியெல்லாம் காத்திட வருக வருக பூரணை நாதனே வருக வருக புண்ணிய மூர்த்தியே வருக வருக பூதநாயகா வருக வருக புஷ்கலை பதியே வருக வருக பொன்னம்பலதுறை ஈசா வருக அடியாரை காக்க அன்புடன் வருக வருக வருக வாசவன் மைந்தா வருக வருக வீரமணிகண்டா வஞ்சனை நீக்கிட வருக வருக வல்வினை போக்கிட வருக வருக ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக அச்சம் அகற்றிட அன்பனே வருக இரு வினை களைந்தே எனையாட்கொள்ள இருமூர்த்தி மைந்தா வருக வருக பதினென்படிய

Poi Indri Meiyodu Nei Kondu Ponaal Song Lyrics in Tamil

 பொய் இன்றி மெய்யோடு: Poi Indri Meiyodu Nei Kondu Ponaal Lyrics in Tamil பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் இருப்பது காடு வணங்குது நாடு அவனைக் காண – தேவை பண்பாடு அய்யப்பா பூஜைகள் போடு தூய அன்போடு பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் -நல்ல பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள் அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான் பொய் இன்றி அய்யப்பா சரணம் அய்யப்பா (3) Poi Indri Meiyodu Nei Kondu Ponaal Lyrics in Tamil

Irumudi Iriavaa Saranam Saranam Song Lyrics in Tamil

 சுவாமியே.. Irumudi Iriavaa Saranam Saranam Lyrics in Tamil சரணம் அய்யப்போ.. இருமுடி பிரியனே சரணம் அய்யப்போ…. சரண‌ கோஷப் பிரியனே சரணம் அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. இருமுடி இறைவா சரணம் சரணம் திருவடி வேண்டும் சரணம் சரணம் இருமுடி இறைவா சரணம் சரணம் திருவடி வேண்டும் சரணம் சரணம் படி பதினெட்டும் சத்திய‌ சரணம் வடிவுடையோனே நித்திய‌ சரணம் புலி வாகனனே சரணம் சரணம் புருஷோத்தமனே சரணம் சரணம் சபரிமலை வாழும் சாஸ்தா சரணம் சாஸ்திர‌ வடிவே குருவே சரணம் இருமுடி இறைவா சரணம் சரணம் திருவடி வேண்டும் சரணம் சரணம் சுவாமி சரணம் அய்யப்ப சரணம் பகவான் சரணம் பகவதி சரணம் தேவன் சரணம் தேவி சரணம் ஈஸ்வரன் சரணம் ஈஸ்வரி சரணம் தேவன் சரணம் தேவி சரணம் ஈஸ்வரன் சரணம் ஈஸ்வரி சரணம் தேவன் சரணம்…… தேவி சரணம்……. சரணத்தை ஒருதரம் சொல்லிவிடு சங்கடம் உனக்கில்லை தள்ளிவிடு சரணத்தை ஒருதரம் சொல்லிவிடு சங்கடம் உனக்கில்லை தள்ளிவிடு சரணமே அவனென்று கொண்டு விடு சரணமே அவனென்று கொண்டு விடு மரணமே நமக்கில்லை கண்டுவிடு இருமுடி இறைவா சரணம் சரணம் திருவடி வேண்டும் ச

Enthan Thaayanavan Nenjil Seyaagi Thuyilkintraan Song Lyrics in Tamil

எந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான் Enthan Thaayanavan Nenjil Seyaagi Thuyilkintraan எந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான் தாலாட்டை நான் பாடத்தான் சரணத்தை நான் தாலாட்டாய் தினம் பாடத்தான் கருணைக் கடலானவன் நெஞ்சில் அலையாகித் தவழ்கின்றான் தாலாட்டை நான் பாடத்தான் சரணத்தை நான் தாலாட்டாய் தினம் பாடத்தான் என் அய்யனே கண் மூடி நீ தூங்கிடு பக்தர்களின் நெஞ்சத்தில் சயனித்திடு எந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான் தாலாட்டை நான் பாடத்தான் காற்றாட‌ கொடியாட‌ வனம் ஆடுமே சபரி வனம் ஆடுமே ஐயன் கண் வசத்தாலேதால் கடல் ஏழு, ஸ்வரம் ஏழு, பிறப்பேழுதான் உலகில் பிறப்பேழுதான் இதில் நீ இன்றாய் இடம் ஏதுதான் என் கண் தந்த‌ நீயே அதில் ஒளியாகிறாய் என் குரல் தந்த‌ நீயே அதில் ஒலியாகிறாய் உடல் தந்து உயிர் ஆகிறாய் … ஆ..அஆ .அஆ….ஆ (எந்தன் தாயானவன் நெஞ்சில்) பருவங்கள் மாற‌ உடல் உருமாறுமே உள்ளம் அய்யன் அவன் நினைவாகுமே என்றும் சரணங்கள் சொல்ல‌ ஒரு நிலையாகுமே மனச் சலனங்கள் கலைந்தோடுமே உன்னை அபிஷேகம் செய்யத்தான் பாலைக் கொணர்ந்தேன் உன்னை அல‌ங்காரம் செய்யத்தான் மாலைக் கொணர்ந்தேன் உன்னை சேவிக்க‌ என்னை

Pallikattu Sabari Malaikku Song Lyrics in Tamil

Pallikattu Sabari Malaikku Lyrics in Tamil  இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண‌ வந்தோம் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ சுவாமி சரணம் அய்யப்ப‌ சரணம் (2வது முறை சப்தம் குறைவாக‌) பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே நெய்யபிஷேகம் சுவாமிக்கே கற்பூர‌ தீபம் சுவாமிக்கே ஐய்யப்பன்மார்களும் கூடிக்கொண்டு அய்யனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கே சென்றிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே) கார்த்திகை மாதம் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து பார்த்த‌ சாரதியின் மைந்தனே உனை பார்க்க‌ வேண்டியே தவமிருந்து(2) இருமுடி எடுத்து எருமேலி வந்து ஒரு மனதாகி பேட்டை துள்ளி அருமை நண்பராம் வாவரைத் தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே) அழுதை ஏற்றம் ஏறும்போது அரிஹரன் மகனை துதித்து செல்வார் வழிகாட்டிடவே வந்திடுவார் அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார் கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணைக் கடலும் துணை வருவார் கரிமலை இறக்கம் வந்தவுடனே திருந‌தி