மந்திர கோஷப்பிரியனே சரணம் :
Ayyappan Naamam Enakku Jeeva Manthiram Lyrics in Tamil |
ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் – அதை
சொல்ல சொல்ல வாழ்வினிலே பேரின்பம் (ஐயப்பன் நாமம்)
காடும் மலையும் கடக்கவைக்கும் ஐயப்பன் நாமம்
களைப்பில்லாமல் நடக்க வைக்கும் ஐயப்பன் நாமம்
பாடுவோர்க்கு பலனளுக்கும் ஐயப்பன் நாமம்
பக்கத்துணையாயிருக்கும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்)
தேனைப் போலத் தித்திக்கும் ஐயப்பன் நாமம்
தெய்வ நலம் கூடவைக்கும் ஐயப்பன் நாமம்
மோனத்தவ நலம் சேர்க்கும் ஐயப்பன் நாமம்
முக்திதரும் சித்திதரும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்)
சபரிமலை ஐயப்பா சஞ்சலத்தை மாற்றப்பா
அபயம் தரும் ஐயப்பா ஆறுதலை அருளப்பா
கருணை உள்ள ஐயப்பா கைகொடுத்து உதவப்பா
அருள் உருவே ஐயப்பா ஆதரிப்பாய் ஐயப்பா (ஐயப்பன் நாமம்)
Ayyappan Naamam Enakku Jeeva Manthiram Lyrics in Tamil |
Comments
Post a Comment