மீனராசி அன்பர்களே! அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொன், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கக்கூடும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வீடு, மனை வாங்கும் முயற்சி அனுகூலமாக முடியும். ஆனால், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக் கூடும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். அலுவலகத்தில் ...