ஏப்ரல் 14ம் தேதி, சார்வரி தமிழ் வருடம் பிறக்கப்போகிறது. தமிழர்கள் சித்திரை 1ம் தேதி புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். சார்வரி ஆண்டில் நடக்க இருக்கும் ராசிபலன்கள், கிரக பலன்கள், கிரக பெயர்ச்சி, திருமணம், உத்தியோகியம், ஆரோக்கியம் போன்ற பலன்களை இங்கே 12 ராசிகளுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2020 - 2021 மேஷம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020: நீங்க செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்க உழைப்பிற்கு ஏற்ற பலன் தேடி வரும். உங்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுப காரியங்கள் நடைபெறும். செல்வம் செல்வாக்கு மேலோங்கும். வசதி வாய்ப்புகளை தரக்கூடிய ஆண்டாக இந்த புத்தாண்டு அமையவுள்ளது. ரிஷபம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020: தமிழ்புத்தாண்டு அதிகமான சந்தோஷங்களை அள்ளிக்கொடுக்கவிருக்கிறது. நீங்கள் எந்த விஷயத்திற்கும் கவலைப்படாதீர்கள்.பதவிகள் பட்டங்கள் உங்களை தேடி வரும். ராகுவினால் ஐஸ்வர்யம் கிடைக்கும். மகாலட்சுமிக்கு நிகராக செல்வம் உங்களுக்கு கிடைக்கும். மன அழுத்தம் நீங்க தியானம் இறைவழிபாடு செய்யுங்கள். < மிதுனம...