ஏப்ரல் 14ம் தேதி, சார்வரி தமிழ் வருடம் பிறக்கப்போகிறது. தமிழர்கள் சித்திரை 1ம் தேதி புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். சார்வரி ஆண்டில் நடக்க இருக்கும் ராசிபலன்கள், கிரக பலன்கள், கிரக பெயர்ச்சி, திருமணம், உத்தியோகியம், ஆரோக்கியம் போன்ற பலன்களை இங்கே 12 ராசிகளுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
<
தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2020 - 2021 |
மேஷம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020:
நீங்க செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்க உழைப்பிற்கு ஏற்ற பலன் தேடி வரும். உங்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுப காரியங்கள் நடைபெறும். செல்வம் செல்வாக்கு மேலோங்கும். வசதி வாய்ப்புகளை தரக்கூடிய ஆண்டாக இந்த புத்தாண்டு அமையவுள்ளது.
ரிஷபம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020:
தமிழ்புத்தாண்டு அதிகமான சந்தோஷங்களை அள்ளிக்கொடுக்கவிருக்கிறது. நீங்கள் எந்த விஷயத்திற்கும் கவலைப்படாதீர்கள்.பதவிகள் பட்டங்கள் உங்களை தேடி வரும். ராகுவினால் ஐஸ்வர்யம் கிடைக்கும். மகாலட்சுமிக்கு நிகராக செல்வம் உங்களுக்கு கிடைக்கும். மன அழுத்தம் நீங்க தியானம் இறைவழிபாடு செய்யுங்கள்.
மிதுனம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020:
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்க திறமை வெளிப்படும். பதவி உயர்வும் எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றமும் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் மிதுன ராசிக்காரர்களான உங்களுக்கு அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது
கடகம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020:
தமிழ் புத்தாண்டு முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமைகிறது. அதிகாரம் மற்றும் பதவிகள் கிடைக்கும்.
குரு பார்வையால் இந்த ஆண்டு சந்தோசமாக இருப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளினால் வீடு களைகட்டும். திருமண தடைகள் நீங்கி விரும்பிய வாழ்க்கை தேடி வரும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு அதிக சம்பளத்துடன் உயர்வு கிடைக்கும்.
சிம்மம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020:
தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த சார்வரி ஆண்டானது உங்களுக்கு சந்தோஷங்களை அதிகமாக கொடுக்கும். இந்த ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். பெரிய பதவிகள் கைக்கு வரும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.
கன்ன தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020:
தமிழ் புத்தாண்டானது சுகமான ஆண்டாக பிறக்கிறது. பெண்களுக்கு பணம் மற்றும் நகை சேரும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் உங்களின் திறமை வெளிப்படும் அதுவே உங்க புரமோசனுக்கு வழிவகுக்கும். கணவன் மற்றும் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உங்களுக்கு பண பற்றாக்குறை நீங்கும்.
துலாம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020:
தமிழ் புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்களாகிய நீங்கள் நிறைய சவால்களை எதிர்கொள்வீர்கள். இந்த ஆண்டு சொத்துக்கள் வாங்கும் யோகம் தேடி வரும். சிலருக்கு புதிய பதவிகள் சம்பள உயர்வு கிடைக்கும். துணிச்சலாக நீங்க எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
விருச்சிகம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020:
விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சுப காரிய பேச்சுக்கள் சாதகமாக முடியும். பேச்சில் கோபத்தை குறைத்துக்கொண்டால் நல்லதே நடக்கும். அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வரும்.
தனுசு தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020:
குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் வருவாய் கிடைக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். அடிக்கடி கோபப்பட்டுக்கொண்டிருந்த மன நிலை மாறி உங்க கோபம் படிப்படியாக குறையும். சாதனைகள் நிறைந்த ஆண்டாக சார்வரி புது வருடம் உங்களுக்கு பிறக்கப் போகிறது.
மகரம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020:
தமிழ் புத்தாண்டில் குடும்பத்தில் அதிக குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறது. நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தைகளுக்கு கல்வி செலவுகள் தேடி வரும். திட்டமிட்டு செலவு செய்யுங்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
கும்பம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020:
குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். நீங்க நினைத்தது நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் இந்த ஆண்டு நடைபெறும். குழந்தைக்காக தவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். சேமிப்பு அதிகமாகும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மீனம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2020:
வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். கௌரவ பதவிகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பங்குச்சந்தையில் நீங்கள் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். திருமணம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும். விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும்.
Comments
Post a Comment