Skip to main content

Posts

Showing posts with the label திருக்கோயில்

அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004

  அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு: காரண ஆகமப்படி அமைக்கப்பட்ட திருக்கோயில் மயிலையில் உள்ள ஏழு சிவாலயத்தில் ஒன்று. பொன் பொருளுக்கும் வரம் அளிக்கும் பொற்கொடியம்மன் எழுந்தருளிய தலம். மேலும் இத்தலத்தில் உட்புற சன்னதியில் ஸ்ரீ அம்பாள் ஸ்ரீ அண்ணாமலையார் ஸ்ரீ முருகன் சந்நிதி ஸ்ரீ பைரவர் சன்னதி நக்கிரக சன்னதிகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் திருமயிலை ஸ்தலமாகும்.

அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004

  அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் தல வரலாறு: ஸ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோயில் இந்து கடவுளுக்கான விஷ்ணுக்காக அர்ப்பணிக்கப்பட்ட திருக்கோயிலாகும் இத்திருக்கோயில் பல்லவர் காலத்து தாழ்வரைகோயில் கட்டிட அமைப்பை சார்ந்த மிக பழமையான விஷ்ணு திருக்கோயிலாகும் இத்திருக்கோயிலில் மாதவப்பெருமாள் மற்றும அமிர்தவல்லி தாயாருடன் அருள்பாலிக்கும் திருக்கோயிலாகும்.   காரண ஆகமப்படி அமைக்கப்பட்ட திருக்கோயில் மயிலையில் உள்ள ஏழு சிவாலயத்தில் ஒன்று. பொன் பொருலுக்கும் வரம் அளிக்கும் பொற்கொடியம்மன் எழுந்தருளிய தலம். தனஜெயன் என்ற அடியாரிடம் திருவிளையாடலில் புரிந்த தலம். இப்படி பல்வேறு பெருமைகள் வாய்ந்த தொன்மைத்தலமாக விளங்குகிறது. சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ பொற்கொடி உடனுறை ஸ்ரீ காரணீஸ்வரர் திருக்கோயில்.

அருள்மிகு வினைதீர்த்த விநாயகர் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை - 600049

  அருள்மிகு வினைதீர்த்த விநாயகர் திருக்கோயில் தல வரலாறு:

அருள்மிகு மாணிக்க விநாயகர் திருக்கோயில், மீர்சாகிப் பேட்டை, சென்னை - 600014

அருள்மிகு மாணிக்க விநாயகர் திருக்கோயில் தல வரலாறு:  வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டின் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரின் திருமுகமாய்த் திகழ்வது திருவல்லிக்கேணியாகும். பழமை வாய்ந்த திருவல்லிக்கேணிக்கு அருகாமையில் மீர்சாகிப்பேட்டையில் அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவிநாயகர் திருக்கோயிலாகும்

அருள்மிகு ஓம் சர்வ சக்தி விநாயகர் திருக்கோயில், டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, சென்னை, 600004

  அருள்மிகு ஓம் சர்வ சக்தி விநாயகர் திருக்கோயில் தல வரலாறு:   வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டின் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரின் திருமுகமாய் திகழ்வது திருமயிலையாகும். பழம் பெருமை வாய்ந்த மயிலாப்பூரில் இராதாகிருஷ்ணன் நெடுஞ்சாலையில் கல்யாணி மருத்துவமனைக்கு அருகாமையில் அமைந்துள்ளது அருள்மிகுஓம் சர்வ சக்தி விநாயகர் திருக்கோயிலாகும்.  

அருள்மிகு பயிண்டியம்மன் திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005

   அருள்மிகு பயிண்டியம்மன் திருக்கோயில் தல வரலாறு: அருள்மிகு பயிண்டியம்மன் திருக்கோயில், 6வது தெரு   நடுகுப்பம், திருவல்லிக்கேணி,  சென்னை - 600005    

அருள்மிகு மாணிக்க விநாயகர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004

அருள்மிகு மாணிக்க விநாயகர் திருக்கோயில் தல வரலாறு:   வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டின் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரின் திருமுகமாய் திகழ்வது திருமயிலையாகும். பழமை வாய்ந்த மயிலாப்பூரில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவிநாயகர் திருக்கோயிலாகும்.    

அருள்மிகு சக்தி விக்னேஸ்வர திருக்கோயில், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600004

      அருள்மிகு சக்தி விக்னேஸ்வர திருக்கோயில் தல வரலாறு: சக்தி விக்னேஸ்வர திருக்கோயில், எழுந்தருளியிருக்கும் சக்தி விக்னேஸ்வரர் வழிபடும் பக்தர்களுக்கு வேண்டியதை அருளும் மூர்த்தியாக விளங்குகின்றார். இத்திருத்தலத்தில் பழ மாலை அலங்காரம் தனிசிறப்பு வாய்ந்ததாகும்.    

அருள்மிகு வீரபத்திர சுவாமி திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004

அருள்மிகு வீரபத்திர சுவாமி திருக்கோயில் தல வரலாறு:   தட்சனை சம்ஹாரம் செய்த வீரபத்திரர் வெற்றிலை கொடியுடன் கூடிய இத்தலத்தில் வந்தவுடன் அவருக்கு அமைதி ஏற்பட்டது. வெற்றிலை வாசனை அவருக்கு அமைதியை கொடுத்தது. அன்று முதல் வெற்றிலை மாலை அவருக்கு பிடித்த பொருளாக மாறியது. இத்தலத்தில் வீரபத்திரர் கோபம் தணிந்து சாந்த மூர்த்தி ஆனவுடன் தாட்சாயினி பார்வதி தேவி அவர் முன்பு தோன்றி தன் வளர்ப்பு தந்தையின் அறியாமையை மன்னித்து அவரை உயிர்பெறச் செய்யுமாறு வேண்டியவுடன் வீரபத்திரர் தட்சனை உயிர் பெறச் செய்தார். தட்சன் தன் தவறை வீரபத்திரரிடம் மன்னிக்கும்படி வேண்டி சாம வேதங்களைச் சொல்லி வீரபத்திரரை சிவபெருமான் மனம் மகிழச் செய்தவுடன் வீரபத்திரர் தட்சனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க தட்சன் தன் மகள் தாட்சாயணியின் திருமண வைபவத்தைத்தான் காண வேண்டும் என்று கேட்க வீரபத்திரர் வரும் பங்குனி உத்திர நாளிலே தாட்சாயினியைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார் . தாட்சாயினி தன் வளர்ப்பு தங்தைக்கே அபயம் கொடுத்ததால் அன்று முதல் அபயாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள் . ஒரு பங்குனி உத்திர நன்நாளில் முக்கோடி தேவர்

அருள்மிகு தர்மராஜா திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004

     அருள்மிகு தர்மராஜா திருக்கோயில் தல வரலாறு:  மகாபாரதத்தை இந்தியாவின் இதிகாசமாகப் போற்றப்பட்டாலும் தமிழகத்திலே மகாபாரதக்கதை மாந்தர்களாகப் போற்றப்படும் பஞ்ச பாண்டவர்களும், பாஞ்சாலி திரௌபதியம்மனும் கிராம தேவதைகளாகப் போற்றி வணங்கப்படுவது தம் தமிழகத்தின் பண்பாடு. அப்படி கிராம தெய்வமாக தர்மராஜா திருக்கோயில் விளங்குகிறது. இங்கு தர்மர், பீமர், அர்ச்சுனர், நகுலர், சகாதேவர் இவர்களுடன் திரௌபதியம்மன் போன்ற மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்.    

அருள்மிகு மல்லீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004

   அருள்மிகு மல்லீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு: அயோத்தி மாநகரில் பிரார்த்தன் என்ற பக்தன் சிவ வேள்விக்காக இடம் தேடி அலைந்த பொழுது மயிலம்பதியில் மல்லிகை வனத்தில் பிரம்மாண்டமான சிவலிங்க திருமேனி இருப்பதை கண்டு இறங்கி மிக பிரமாண்ட அதிருத்ர ஹோமம் செய்து கொண்டு இருந்தான். இந்த வேள்வியாகப்பட்டது இந்திர லோகம் வரை தென்பட்டது. இதை கண்ட இந்திரன் நமக்கு மேல் யாரும் சிவ சக்தி அடைந்து விடக்கூடாது என்கிற எண்ணத்தில் வேள்வியை அளிக்க மேனகையை அனுப்பி தவத்தை கெடுக்க நினைத்தான். ஆனால் அதிலும் மயங்காத பிரார்த்தன் மிக தீவிர பக்தனாக திகழ்ந்ததால் ஸ்ரீ மல்லீஸ்வரர் காட்சி கொடுத்து தனக்கு மல்லீஸ்வரர் என பெயரிட்டு பூஜை செய் என கூறி மறைந்தார் என கூறப்படுகிறது.  

அருள்மிகு விருபாட்சீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004

அருள்மிகு விருபாட்சீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு: மயிலையே கயிலை கயிலையே மயிலை என்று போற்றப்படும் புண்ணியத் தலமான மயிலையில் பாச்சா கோயில் என வட்டார வழக்கில் வழங்கப்படும் அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத விருபாட்சீஸ்வரர் திருக்கோயில் காரணீஸ்வரர் திருக்கோயிலின் வலது புறம் அமைந்துள்ளது. திருக்கோயிலில் சிவகங்கை என்னும் தீர்த்தத்தையுடையது. கிழக்கு நோக்கிய சுவாமி சன்னதியும் , தெற்கு நோக்கிய விசாலாட்சி சன்னதியும் உள்ளது. அம்பாள் சன்னதிக்கு முன்புறம் ரிஷப வாகனம் உள்ளது. விரூப அட்சய ஈஸ்வரர் என்பதே விருபாட்சீஸ்வரர் என்ற பெயராக அமைந்துள்ளது. விரூப என்பது இயற்கைக்கு மாறான கண்ணை உடைய இறைவன் அதாவது நெற்றிக் கண்ணை உடைய இறைவன் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. விருபாட்சீஸ்வரர் என்பது மருவி பாச்சக்கோயில் என்ற வழக்கு மொழியிலும் வழங்கப்படுகிறது.  

அருள்மிகு ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், ராம் நகர், சென்னை, 600061

அருள்மிகு ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் தல வரலாறு:  சென்னை ஆதி வ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சென்னை என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும். கோயில் அமைப்பு இக்கோயிலில் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் சன்னதியும், கோதண்டராமர், சீதா, லட்சுமணன், துவார பாலகர்-2, கிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா, விநாயகர், ராகவேந்திரர், நகர், கருடர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது. பூசைகள் இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி வழிபாடு நடக்கிறது. மார்கழி மாதம் அனுமன் ஜெயந்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் ஸ்ரீ ராம நவமி திருவிழாவாக நடைபெறுகிறது. 

அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004

அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில் தல வரலாறு:  திருக்கோயிலின் தோற்றம் :  திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடபுறமும் , அருள்மிகு மாதவ பெருமாள் திருக்கோயிலுக்கு மேற்கும் முண்டகக்கண்ணியம்மன் தெரு எனத் தொன்று தொட்டு முண்டகக்கண்ணியம்மன் பெயரில்; அழைக்கப்படும் தெருவில் இத்திருக்கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக அம்பாள் தோன்றியதுடன் சுயம்பான அருவுருவ தோற்றத்தின் மேல் பகுதி தாமரை மொட்டு வடிவிலும் சுயம்புவின் முகப்பு தோற்றத்தில் அமைந்து நடுப்பகுதியில் திரிசூலம் பதிக்கப்பட்டுள்ளது .தாமரையின் இன்னொரு பெயர் `முண்டகம் ` என்பதால் மக்கள் இந்த அம்மனை முண்டகக்கண்ணியம்மன் என்று அழைக்கின்றனர். அம்மனின் பின்புறம் பெரிய புற்றிலிருக்கும் நாகம் நாளும் அம்பாளை வழிபட்டு வந்ததால் அம்பாளுக்கு ஓலைக் கூரை அமைக்கப்பட்டதாக வழிவழிச்செய்தி உள்ளது .வெப்பத்தினைத் தானே தாங்கி மக்களுக்கு குளிர்ச்சியை அளிக்க ஓலைக்கூரையில் தங்கி அருள் பாலிக்கிறாள்.    நாகம் வழிபடுதல் மூலவர் அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் பின்புறம் நாகப்புற்றும் குரு ஆலமரமும் உள்ளது.நாகம் இரவில் அம்மனை வழிபடுவதால் நாக தோஷம் உள

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், அம்பத்தூர், சென்னை - 600053

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்:  

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருமுல்லைவாயல், சென்னை - 600062

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு: தொண்டை  நாட்டில் வடதிசையில் முரடர்களாகிய குறும்பர்கள் ஓணன் வாணன் மக்களுக்குத் துன்பம் விளைத்து வந்தனர். அவர்களின் அடாத செயலுக்கு ஒரு முடிவுகட்டி அடக்கி வைக்கும் நோக்கத்தோடு தொண்டைமான் காஞ்சியிலிருந்து படையுடன் கிளம்பினான். வரும் வழியில் மன்னன் ஏறிவந்த யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் பிண்ணி பிணைந்தன யானை தன் காலை எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படவே மன்னன் யானையின்மேல் அமர்ந்தபடியே முல்லைக்கொடிகளை வெட்டினான். அந்த இடத்தில் இருந்த கொடிகள் வெட்டுப்பட்டு அறுந்தன அந்த இடத்திலிருந்து குருதி இரத்தம் பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு யானையிலிருந்து இறங்கி அந்த இடத்தை விலக்கி ஆராய்ந்து பார்த்தான். அங்கு இறைவனின் திரு உருவாகிய இலிங்கத்தைக் கண்டான் தரையில் விழுந்து புரண்டான் வியர்த்துப் போனான் கண்ணில் நீர் பெருகி வேண்டினான். இறைவன் தோன்றி மன்னனே வாளால் வெட்டுண்டாலும் மாசிலா மணியாக குறையில்லா மணியாக இருப்போம் வருந்தற்க நீ நந்தியின் துணையுடன் போர் செய்து வெற்றி பெறுவாயாக எனக் கூறி மறைந்தார். பிறகு தொண்டைமான் நந்தியின் துணையோடு குறும்பர்களை வென்று ப

அருள்மிகு தேவி பெரியபாளையத்தம்மன் திருக்கோயில், அரும்பாக்கம் , சென்னை- 600106

அருள்மிகு தேவி பெரியபாளையத்தம்மன் திருக்கோயில், அரும்பாக்கம் , சென்னை- 600106  

அருள்மிகு தேவி திருமணியம்மன் திருக்கோயில், அண்ணாநகர், சென்னை - 600040

அருள்மிகு தேவி திருமணியம்மன் திருக்கோயில்  தல வரலாறு: இக்கோயிலில் மரத்தால் செய்யப்பட்ட சிலை வடிவில் கருமாரியம்மனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளை "மரச்சிலை அம்மன்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். இவளிடம் வேண்டிக்கொண்டால் வீட்டிற்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருப்பாள் என்பது நம்பிக்கை. எனவே இவளிடம் வேண்டி அருகிலுள்ள உண்டியலில் பூட்டு வைத்து வழிபடும் வித்தியாசமான வழக்கம் இருக்கிறது.கோயிலுக்கு வெளியில் "திருச்சாம்பல் பொய்கை' தீர்த்தம் இருக்கிறது. அம்பாள் சன்னதி எதிரில் கொடிமரம் உள்ளது. பெரும்பாலான அம்பாள் தலங்களில் திருவிழாவின்போது, காப்புக்கட்டித்தான் விழா நடத்துவர். இங்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. பசு சாணத்தில் செய்த சாம்பலையே இக்கோயிலில் பிரசாதமாக தருகின்றனர். புற்றிற்கு அருகில் விநாயகர், நாகர் இருக்கின்றனர். பொதுவாக விநாயகர் வலது கையில் தந்தமும், இடக்கையில் மோதகமும் வைத்திருப்பார்.  

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை - 600026

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் தல வரலாறு:  அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருத்தலம் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. முதன் முதலில் சிறிய ஓலைக்கூரைக் கொட்டகை அமைக்கப்பட்டு, அதில் முருகனுடைய வண்ண ஓவியப்படம் வைத்து தீவிர முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் வழிபட்டு வந்தார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முருகபக்தரான அவர் திருத்தணி, திருப்போரூர் ஆகிய திருமுருகன் திருத்தலங்களுக்கு, கடும் புயலிலும் மழையிலும் திருடர் இடைமறித்தாலும் கூட தவறாது சென்று வழிபட்டவர். அவரின் கனவில் ஒரு பெரியவர் தோன்றி உன் வீட்டிலேயே முருகன் குடியிருக்கும் போது நீ ஏன் இங்கு அவனைத் தேடிக் கொண்டு அல்லல்பட்டு ஓடி வருகின்றாய்? அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே! என கூறக்கேட்டு, உறக்கத்திலிருந்து திடுமென விழித்து எழுந்து, முருகன் அருளை நினைத்து உருகித் தொழுது, வீட்டுக்குத் திரும்ப வந்து சேர்ந்தார். நடந்த சம்பவத்தை வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்து அன்று முதல் தம் வீட்டிலேயே காலை, மாலை, இரு வேளைகளிலும் முருகனை நினைத்து வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் தான் சந்தித்த பழநி சாது தெரிவித்தது ப

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004

  தன்னை எதிர்பவர்களின் பலத்தை பாதியை கிரகித்துக்கொள்ளும் வலிமை படைத்த பராக்கிரமசாலியான வாலி, இந்தத் தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளர். வாலி தன்னுடைய வேண்டுதலுக்காக வழிபட்ட சிவலிங்கம் என்பதால், இங்குள்ள இறைவன் வாலீஸ்வரர் என்ற திருநாமத்திலேயே அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயிலில் 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. கோயில் சிறப்பு இத்திருக்கோயில் 1300 வருடங்களுக்கு பழைமையான திருக்கோயில் ஆகும். அருள்மிகு வாலீசுவரர் கிழக்கு முகமாக நோக்கியும், அம்பாள் அருள்மிகு பெரிய நாயகி என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கின்றனர். வாலி பெருமானை வடக்கு நோக்கி பூஜிக்கிறார். மகிழ மரம் தல விருட்சமாகவும், தீர்த்தம் வாலி தீர்த்தம் எனவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோயில் அருள்மிகு பஞ்சலிங்கம் உள்ளது தனிச்சிறப்பு. மயிலாப்பூரில் உள்ள ஏழு சிவாலயங்களில் ஒன்று. வள்ளி, தெய்வானையுடன் அருள்மிகு சுப்பிரமணியர் கிழக்கு முகம் நோக்கி அருள்பாலிக்கிறார். பஞ்சலிங்க சன்னதியின் கோபுரமானது, காசி விஸ்வநாதர் ஆலையத்தில் கோபுர அமைப்பில் உள்ளது. இங்கு சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. மூலவர் சன்னதியின்