Ayyappaa Swamy Kavacham in Tamil கணபதி துதி அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே ஐங்கரனே அருள் புரிவாய். காப்பு ஹரிஹர புத்திரனை ஆனந்த ரூபனை இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை சபரி கிரீசனை சாந்த ஸ்வரூபனை தினம் தினம் போற்றி பணிந்திடுவோம் (அய்யப்ப தேவன் கவசம் இதனை அனுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும் தினம் தினம் துதிக்க தீரும் வினை எல்லாம் நாடிய பொருளும் நலமும் வருமே.) நூல் மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய மணிகண்ட தேவா வருக வருக மாயோன் மைந்தா வருக வருக ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக புலிவாகனனே வருக வருக புவியெல்லாம் காத்திட வருக வருக பூரணை நாதனே வருக வருக புண்ணிய மூர்த்தியே வருக வருக பூதநாயகா வருக வருக புஷ்கலை பதியே வருக வருக பொன்னம்பலதுறை ஈசா வருக அடியாரை காக்க அன்புடன் வருக வருக வருக வாசவன் மைந்தா வருக வருக வீரமணிகண்டா வஞ்சனை நீக்கிட வருக வருக வல்வினை போக்கிட வருக வருக ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக அச்சம் அகற்றிட அன்பனே வருக இரு வினை களைந்தே எனையாட்கொள்ள இருமூர்த்தி மைந்தா வருக வருக பதினென்...