சிம்ம ராசி அன்பர்களே! எதிலும் வெற்றியே பெறுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிரச்னை நீங்கி, ஒற்றுமை ஏற்படும். உங்கள் முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்பட்டாலும் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். பழைய கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவேண்டியது அவசியம். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாத முற்பகுதியில் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். பிற்பகுதியில் அவர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த காரியம் அதிக அலைச்சலைத் தருவதுடன் வீண் விரயத்தையும் ஏற்படுத்தும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வது சற்று மனவருத்தம் தரும். கூடுமானவரை அவர்களைக் கண்டிக்காமல் விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. வியாபாரிகளுக்கு விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மறைமுகத் தொல்லைகள் நீங்கும். பங்குதாரர்கள் வி...