நமது நாட்டில் ஒவ்வொரு குலத்தினருக்கென்று ஒரு பிரத்தியேக குலதெய்வம் இருக்கிறது. அந்த குலதெய்வத்தை எப்படி எல்லாம் வழிபடலாம், குலதெய்வ கோவிலில் என்னென்ன செய்யலாம். இதன் மூலம் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன. இப்படியான குலதெய்வ கோவில் சார்ந்த பல தகவல்களை இந்த பதிவில் காண்போம் வாருங்கள். பொதுவாக குலதெய்வ வழிபாடு செய்ய நினைப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் சேர்ந்து ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது தங்களின் குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து பூஜைகள் செய்து படையல் வைத்து வழிபடுவது மிகவும் சிறந்த பலன்களை குலத்தினர் அனைவருக்கும் உண்டாகச் செய்யும். மற்ற கோவில்களை போல் அல்லாமல் குலதெய்வ கோவிலுக்கும் நமக்கும் இயல்பாகவே ஒரு தொடர்பு இருக்கும். அதே சமயம் உரிமையும் இருக்கும். ஆகையால் நமது கையாலேயே குலதெய்வத்திற்கு பூஜை செய்து நம்மால் வழி பட முடியும். இதை மற்ற கோவில்களில் நம்மால் செய்வது கடினம். நமது கையால் குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்வதன் மூலம் இயற்கையாகவே நமக்குள் ஒரு அற்புதமான ஒரு இன்பம் ஏற்படும். இத்தகைய பூஜை செய்த பலர் இதை உணர்ந்திருப்பீர்கள். காதுகுத்து, திருமணம் மற்றும் இதர விசேஷ...