விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவானாவார். விருச்சிகம் ராசியில் விசாகம்நட்சத்திரத்தின் 4ம் பாதமும், அனுஷம், கேட்டை நட்சத்திரங்கள் இதில் அடங்கும். விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். விருச்சிகம் ராசி ஆண் குழந்தை/பெண் குழந்தை: விசாகம் (பாதம் 4) - THO (தோ) அனுஷம் - NA, NI, NU, NE (ந, நி,நு, நே) கேட்டை - NO, YA, YI, YU (நோ,ய, யி, இ,யு) விருச்சிக ராசியினர் இயல்பாகவே குறும்புத்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அலட்டி கொள்ள மாட்டார்கள். எதையும் விடாபிடியாக நின்று சாதிப்பார்கள். பார்பதற்கு அப்பாவித்தனமான முகத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னுடயதை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டார்கள். வாய் ஜாலம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பேசி ஜெயிப்பது கடினம். விருச்சிக ராசியினர் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் முன் கோபம் அதிகம் இருக்கும். எத்தனை தோல்விகள் வந்தாலும் விடாபிடியாக நின்று முடித்து காட்டுவார்கள். இவர்கள் சேமிப்பில் அதிக அ...