மேஷ ராசி அன்பர்களே! ஏப்ரல் 14ஆம் திகதி பிலவ ஆண்டு தொடக்கும் நாளான புதன்கிழமை அன்று உங்கள் ராசியிலேயே சூரியன், சந்திரன், மற்றும் சுக்கிரன் என 3 கிரகங்கள் நிற்கின்றன. சூரியன் உச்சமாகவும் சந்திரன் தனது நட்பு வீட்டில் இருப்பதும் சிறப்பு, மேலும் இரண்டாம் அதிபதியாக வரக்கூடிய சுக்கிரனும் உங்கள் ராசியிலேயே இருப்பதும் நன்மைகளைத் தரக்கூடியது. மிகச்சிறந்த நல்ல பலன்களைத் தரும். உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான முயற்சி மற்றும் வெற்றியைத் தரக்கூடிய ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுடைய முயற்சிகள், செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். எனவே மிகச் சிறப்பாக சிந்தித்து செயல்பட்டு பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சகோதர ஒற்றுமை பலப்படும். சகோதரர்களுடன் சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இப்போது சுமுகமான முடிவுக்கு வரும். தாய் தந்தையரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்களுடைய உதவியும் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றிகரமாக இருக்...