Skip to main content

Posts

Showing posts with the label அருள்மிகு மல்லீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு மல்லீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004

   அருள்மிகு மல்லீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு: அயோத்தி மாநகரில் பிரார்த்தன் என்ற பக்தன் சிவ வேள்விக்காக இடம் தேடி அலைந்த பொழுது மயிலம்பதியில் மல்லிகை வனத்தில் பிரம்மாண்டமான சிவலிங்க திருமேனி இருப்பதை கண்டு இறங்கி மிக பிரமாண்ட அதிருத்ர ஹோமம் செய்து கொண்டு இருந்தான். இந்த வேள்வியாகப்பட்டது இந்திர லோகம் வரை தென்பட்டது. இதை கண்ட இந்திரன் நமக்கு மேல் யாரும் சிவ சக்தி அடைந்து விடக்கூடாது என்கிற எண்ணத்தில் வேள்வியை அளிக்க மேனகையை அனுப்பி தவத்தை கெடுக்க நினைத்தான். ஆனால் அதிலும் மயங்காத பிரார்த்தன் மிக தீவிர பக்தனாக திகழ்ந்ததால் ஸ்ரீ மல்லீஸ்வரர் காட்சி கொடுத்து தனக்கு மல்லீஸ்வரர் என பெயரிட்டு பூஜை செய் என கூறி மறைந்தார் என கூறப்படுகிறது.