கற்குவேல் அய்யனார் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழமையான கிராமத்துக் கோவிலாகும். தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள காயாமொழி என்ற ஊரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் குதிரைமொழி-தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. கற்குவேல் அய்யனார் கோயில் பெயர்க் காரணம் இத்தலத்தில் குடிகொண்டிருக்கும் அய்யனார் கற்குவா என்ற மரத்தில் இருந்து தோன்றியாதாக ஐதீகம். கற்குவா அய்யன் என்றும், கற்கு வேலப்பன் என்றும், கருக்குவாலை அய்யன் என்றும் பலப் பெயர்கள் இவருக்கு உண்டு. இப்போது கற்குவேல் அய்யனார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். கற்குவேல் அய்யனார் கோயில் வரலாறு: இந்தக் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமை நிறைந்தது. தேரிக்குடியிருப்பு என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி பாண்டியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதிவீர ரான சூர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனிடம் அமைச்சராக இருந்தவர் அய்யனார். இவர் சிவன் மற்றும் விஷ்ணுவின் மானிட வடிவாக பார்க்கப்படுகிறார். மூலவர்: பின்னர் தனியாக ஒரு கோயில் கட்டினர். அதற்கு கற்குவேல் அய்யனார் கோயில் என...