கற்குவேல் அய்யனார் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழமையான கிராமத்துக் கோவிலாகும். தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள காயாமொழி என்ற ஊரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் குதிரைமொழி-தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது.
கற்குவேல் அய்யனார் கோயில் பெயர்க் காரணம்
இத்தலத்தில் குடிகொண்டிருக்கும் அய்யனார் கற்குவா என்ற மரத்தில் இருந்து தோன்றியாதாக ஐதீகம். கற்குவா அய்யன் என்றும், கற்கு வேலப்பன் என்றும், கருக்குவாலை அய்யன் என்றும் பலப் பெயர்கள் இவருக்கு உண்டு. இப்போது கற்குவேல் அய்யனார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
மூலவர்:
பின்னர் தனியாக ஒரு கோயில் கட்டினர். அதற்கு கற்குவேல் அய்யனார் கோயில் என்று பெயரிட்டனர். அதில் பூர்ணம், பொற்கமலம் என்ற இரு தேவியருடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் அய்யனார்.
ஆறாம் நாள் திருவிழாவான கள்ளர் வெட்டுத் திருநாள்தான் மிகப் பிரசித்திப் பெற்றது. கள்ளர் வெட்டு அன்று காலையில் பால்குடம் எடுத்தல், அதன்பின் தாமிரபரணி நதியின் தீர்த்தம் யானை மீது வெள்ளிக் குடத்தில் கொண்டு வருதல். அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு 'கள்ளர் வெட்டு' வைபவம் நடைபெறுகிறது. இளநீரைதான் இங்கு கள்ளராக உருவகப் படுத்தப் படுகிறது. கோவிலின் பின்புறமுள்ள செம்மண் தேரியில் இந்த இளநீர் கள்ளராக வெட்டப் படுகிறது. வெட்டப் பட்ட இளநீரில் இருந்து மண்ணில் விழும் நீர் புனிதமாக கருதப்படுகிறது.
நீர் பட்ட மண்ணை பக்தர்கள் எடுத்துச் சென்று தங்கள் விளைநிலங்களில் தூவுகிறார்கள். கல்லாப் பெட்டியில் வைத்துக் கொள்கிறார்கள். மகசூல் கூடும். வியாபாரம் செழிக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை.
இந்த கோயில் சான்றோர்களின் தெய்வ கோயிலாகும்.
மக்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்பவர்கள். மற்ற நேரங்களை விட பங்குனி உத்திரம் அன்று கட்டாயம் அய்யன் அருள் பெற சான்றோர் இன பெருமக்கள் இங்கு வருகை தருவார்கள்.
கற்குவேல் அய்யனார் கோயில் பெயர்க் காரணம்
இத்தலத்தில் குடிகொண்டிருக்கும் அய்யனார் கற்குவா என்ற மரத்தில் இருந்து தோன்றியாதாக ஐதீகம். கற்குவா அய்யன் என்றும், கற்கு வேலப்பன் என்றும், கருக்குவாலை அய்யன் என்றும் பலப் பெயர்கள் இவருக்கு உண்டு. இப்போது கற்குவேல் அய்யனார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
கற்குவேல் அய்யனார் கோயில் வரலாறு:
இந்தக் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமை நிறைந்தது. தேரிக்குடியிருப்பு என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி பாண்டியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதிவீர ரான சூர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனிடம் அமைச்சராக இருந்தவர் அய்யனார். இவர் சிவன் மற்றும் விஷ்ணுவின் மானிட வடிவாக பார்க்கப்படுகிறார்.மூலவர்:
பின்னர் தனியாக ஒரு கோயில் கட்டினர். அதற்கு கற்குவேல் அய்யனார் கோயில் என்று பெயரிட்டனர். அதில் பூர்ணம், பொற்கமலம் என்ற இரு தேவியருடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் அய்யனார்.
கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர் வெட்டுத் திருவிழா:
கள்ளர் வெட்டுத் திருவிழா என்பது வருடத்தில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுவது. தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் கடைசி ஐந்து நாட்களும் மார்கழி மாதத்தின் முதலாம் நாளும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.ஆறாம் நாள் திருவிழாவான கள்ளர் வெட்டுத் திருநாள்தான் மிகப் பிரசித்திப் பெற்றது. கள்ளர் வெட்டு அன்று காலையில் பால்குடம் எடுத்தல், அதன்பின் தாமிரபரணி நதியின் தீர்த்தம் யானை மீது வெள்ளிக் குடத்தில் கொண்டு வருதல். அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு 'கள்ளர் வெட்டு' வைபவம் நடைபெறுகிறது. இளநீரைதான் இங்கு கள்ளராக உருவகப் படுத்தப் படுகிறது. கோவிலின் பின்புறமுள்ள செம்மண் தேரியில் இந்த இளநீர் கள்ளராக வெட்டப் படுகிறது. வெட்டப் பட்ட இளநீரில் இருந்து மண்ணில் விழும் நீர் புனிதமாக கருதப்படுகிறது.
நீர் பட்ட மண்ணை பக்தர்கள் எடுத்துச் சென்று தங்கள் விளைநிலங்களில் தூவுகிறார்கள். கல்லாப் பெட்டியில் வைத்துக் கொள்கிறார்கள். மகசூல் கூடும். வியாபாரம் செழிக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை.
கற்குவேல் அய்யனார் கோயில் - பங்குனி உத்திரம்:
பங்குனி உத்திர திருவிழாவும் இங்கு அதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.இந்த கோயில் சான்றோர்களின் தெய்வ கோயிலாகும்.
மக்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்பவர்கள். மற்ற நேரங்களை விட பங்குனி உத்திரம் அன்று கட்டாயம் அய்யன் அருள் பெற சான்றோர் இன பெருமக்கள் இங்கு வருகை தருவார்கள்.
உன்மை .மிகவும் சக்தி வாய்ந்த கோவில்
ReplyDelete