மகரவிளக்கு காட்டும் உனக்கு: Makaravilakku Kaattum Unakku Olimayamana Pathai Lyrics in Tamil மகரவிளக்கு காட்டும் உனக்கு ஒளிமயமான பாதை ஐயன் இருக்க கவலை எதுக்கு சரணமே உனக்கு கீதை ஐயன் சரணமே உனன்னு கீதை (மகரவிளக்கு) இருமுடி கட்டும் பஜனைப்பாட்டும் இணைந்தே உடன்வரும்போது இருவினை ஒன்றும் செய்யாது ஐயப்பனின் படை சென்றிடும் வழியில் அங்கே வருவான் அன்போடு ஐயனும் கையில் அம்போடு (மகரவிளக்கு) படிகளில் ஏறும் பரவச நேரம் வேறெதும் நினைவுகளேது நம்கவனம் எங்கும் செல்லாது அந்த பந்தள ராஜனின் பாலகுமாரன் துணையாய் வந்திடும்போது துன்பங்கள் நம்மை அணுகாது (மகரவிளக்கு)