சரங்குத்தி ஆலே நீ சாட்சி: Saranguththi Aalae Nee Saatchi in Tamil சரங்குத்தி ஆலே நீ சாட்சி -சபரி பீடமே நீ சாட்சி தஞ்சம் என்றோர்க்கு தாயினும் சிறந்தவன் தாரகப் பிரம்மமே ஐயப்பா – சுவாமி ஐயப்பா (சரங்) சூர்ய வில்லினை தோளில் அணிந்தவன் தூளியாலே அம்புகள் எய்தும் மனசாம் கொடும் காட்டில் வேட்டையாடிட சுவாமி மணிகண்டன் மகிமை பொன்சரம் தொடுத்தான் மனசாம் கொடும் காட்டில் வேட்டையாடிட சுவாமி மணிகண்டன் மகிமை பொன்சரம் தொடுத்தான் கரிபுலி நரிகளாம் காம குரோதங்களை பல திரை எய்து வீற்றிடவே – எந்தன் விழிகளில் ஐயனின் திருவுருவம் (சரங்) சந்திரனாம் வட்ட பரிசையணிந்து சந்தனம் பொட்டு பள்ளி பாலினில் தெளித்து சந்திரனாம் வட்ட பரிசையணிந்து சந்தனம் பொட்டு பள்ளி பாலினில் தெளித்து கனககேசரிகளாம் வாகனங்களில் ஐயன் கலியுக காடுதேடு வந்தானே இடி மின்னல் உருமிகள் துரத்திடும் சுவாமி இடி மின்னல் உருமிகள் துரத்திடும் சுவாமி – எந்தன் இருள் நெஞ்சில் வேட்டையாடினான் அன்றே இருள் நீங்கி அளிமயமானதே (சரங்)