ரிஷப ராசியினருக்கு பிறக்கப்போகும் பிலவ வரும்தமிழ்ப் புத்தாண்டு என்ன மாதிரியான பலன்களையெல்லாம் தர இருக்கிறது என பார்ப்போம். ராசி அதிபதி சுக்கிரன், மூன்றாம் அதிபதி சந்திரன், நான்காம் அதிபதி சூரியன் இந்த மூன்று கிரகங்களும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடத்தில் இருக்கிறது. உங்கள் ராசியில் ராகு இருக்கிறார். இந்த கிரக பலம் மிகச்சிறந்த அற்புதமான பலன்களைத் தரும். சுபச்செலவுகள் ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். 2021 பிலவ வருடம் தமிழ்ப்புத்தாண்டு ரிஷப ராசி பலன்கள் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் பம்பரமாய் சுழன்று, பரபரப்பாக இயங்கி காரியங்களில் வெற்றி அடைவீர்கள். எதிர்பாராத மிகப்பெரிய தொகை கிடைக்கும் சூழல் ஒரு சிலருக்கு உள்ளது. சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். பெரிய அளவில் திட்டமிட்ட கற்பனைக் கோட்டைகள் நிஜமாக மாறும் காலம் வந்துவிட்டது என்பதை நீங்கள் உணரப் போகும் ஆண்டாக இந்த பிலவ வருடம் இருக்கும். குடும்ப உறவுகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சகோதர சகோதரிகள் இணக்கமாக இருப்பார்கள். தாய் தந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்களுடைய மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். திருமணம் ...