மகாளய அமாவாசை வழிபாடு முறை: புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை தினத்தில் மேலோகத்தில் இருந்து நம் முன்னோர்கள் அனைவரும் பூலோகத்திற்கு வருவதாக ஐதீகம் உள்ளது. இன்றைய நாளில் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பொழுது அதை அவர்கள் மனமார ஏற்றுக் கொண்டு நம்மை வாழ்த்தி விட்டு செல்வார்கள். இந்நாளில் முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி, மூன்று முறை எள்ளும் தண்ணீரும் அர்க்யமாக விடவேண்டும். முன்னோரின் படங்களுக்குப் பூக்களிட வேண்டும். அவர்களுக்கு படையலிடவேண்டும்.நம் முன்னோர்களுக்கு வைத்த படையலை காகத்துக்கு வழங்கி வேண்டிக்கொள்ளவேண்டும். மகாளய அமாவாசை நம் முன்னோர்களை நினைத்து, அவர்களின் நினைவாக, - யாருக்கேனும் புடவை வாங்கிக் கொடுக்கலாம். மகாளய அமாவாசை - வேஷ்டி வழங்கலாம். - குடை வழங்கலாம். மகாளய அமாவாசை - போர்வை வழங்கலாம். - சால்வை வழங்கலாம். - காலணி வாங்கிக் கொடுக்கலாம். ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கலாம். இவை எல்லாமே பித்ரு சாபத்தில் இருந்து நம்மை விடுபடச் செய்யும். பித்ரு தோஷம் முழுவதுமாக நம்மிலிருந்து விலகிவிடும். பித்ருக்களின் பரிபூரணமாக ஆசியைப் பெறலாம். இ...