Skip to main content

Posts

Showing posts with the label விரதம்

தேய்பிறை அஷ்டமியும், பைரவ விரதத்தின் நோக்கமும்

தேய்பிறை அஷ்டமியும், பைரவ விரதத்தின் நோக்கமும் தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும். மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான். பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்ற

ஆண்களுக்கு தெரியாமல் பெண்களால் கடைப்பிடிக்கப்படும் ரகசியமான விரதம்

 ஔவையார் வழிபாடு தென்தமிழகம் எங்கும் இருந்து வருகிறது. ஔவையாருக்கு கடைபிடிக்கப்படும் சிறப்பான இந்த விரதம் தை மாத செவ்வாய்க்கிழமைகளில் தென்தமிழகத்தில் ஒவ்வோர் ஊரிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தால் குடும்ப ஒற்றுமை வளர்ந்து, வறுமை நீங்கி, கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.. விரதமிருக்கும் செவ்வாய்க்கிழமை இரவில் சுமார் 10 மணிக்குமேல் ஆண்கள் எல்லோரும் உறங்கிய பின்னர், விரதம் இருக்கும் பெண்கள், வயதான சுமங்கலிப் பெண் ஒருவர் வீட்டில் கூடுவர். மூத்த பெண்கள் சொல்லச் சொல்ல இளம் பெண்கள் இந்த நோன்பினைச் செய்வார்கள். ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் நெல், வெல்லம், தேங்காய், எண்ணெய், திரி, விளக்கு, கொழுக்கட்டை அவிக்க துணி இப்படி கொண்டு வருவார்கள். நெல்லைக் குத்தி, அரிசி புடைத்து, உப்பு சேர்க்காமல் கொழுக்கட்டை செய்வதே வழக்கம். குத்திய அரிசி மாவால்  விளக்கு செய்து அதில் தீபம் ஏற்றுவார்கள். எரியும் விளக்கில் அதன் அசைவுக்கு ஏற்ப மாறி மாறித் தோன்றும் வடிவங்களைப் போலவே மாவை உருட்டி பல்வேறு உருவங்களில் கொழுக்கட்டை செய்வார்கள். இரவெல்லாம் பாடியும், கதை சொல்லியும் மகிழ்ந்தும் இருந்த ப

யாருக்கு எந்த விரதம் இருக்க வேண்டும்? விரதம் இருக்கும் பொழுது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக் கூடாது?

யாருக்கு எந்த விரதம் இருக்க வேண்டும்? விரதம் இருக்கும் பொழுது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக் கூடாது? விரதம் இருப்பது என்பது இறை நெறிகளை நாம் கடைபிடித்து அதன் பின்னே செல்லும் நல்ல செயலாகும். அறிவியல் ரீதியாகவும் ஒருநாள் விரதம் இருப்பதால் உடலுக்கு நன்மைகள் தான் உண்டாகும். ஆனால் விரதம் இருப்பவர்களின் ஆரோக்கியமும் இதில் முக்கியமானது. உடலை மீறிய விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி விரதம் இருக்க நினைப்பவர்கள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது? யாருக்கு? எப்பொழுது? என்ன விரதம் இருக்க வேண்டும்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’, அது போல நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மால் விரதமும் மேற்கொள்ள முடியும். அப்படி இருக்கும் பொழுது நம் ஆரோக்கியத்தையும் மீறிய விரதம் இருக்க நினைப்பது தவறாகும். எனவே உங்களால் முடிந்த விரதங்களை மட்டும் கடைபிடிப்பது உத்தமம். முழுமையான விரதம் இருப்பதற்கு பெயர் ‘சுத்த விரதம்’ ஆகும். இதை அனைவராலும் எளிதாக கடைபிடித்து விட முடியாது. சுத்த விரதத்தை கடைபிடிக்க முடியாதவர்கள் பழச்ச