ஒரு வீட்டில் செல்வம் கொழிப்பதற்கு மகாலட்சுமியின் அருள் கட்டாயம் வேண்டும். மகாலட்சுமியின் அருள் பெற வீட்டில் இருக்கும் இந்த சிறு சிறு விஷயங்களை சரி செய்து கொள்வதன் மூலம் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பொருட்கள் சரியான திசையிலும், இடத்திலும் அமைந்து விட்டால் செல்வமானது நம்மிடம் குறையாமல் நிறைய துவங்கிவிடும். அந்த வகையில் நம் வீட்டில் செய்ய வேண்டிய எளிய 10 விஷயங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். நம் வீட்டில் இருக்கும் பீரோ சரியான திசையில் அமைந்திருக்க வேண்டும். ஒரு வீட்டில் நீங்கள் பணத்தை வைக்கும் பீரோ அல்லது எந்த பொருளாக இருந்தாலும் சரி அது தென்மேற்கு மூலையில் வடக்கு திசையை பார்த்து அமைந்திருக்க வேண்டும். இப்படி சரியான திசையில் பணத்தை வைத்தால் வீண் விரயங்கள் ஆவது தடுக்கப்படும். இதனால் மென்மேலும் செல்வமானது சேரத் தொடங்கும் என்பது வாஸ்து ஜோதிட நம்பிக்கையாகும். தென்மேற்கு திசையில் கிணறு அமைக்கப்பட்டிருக்க கூடாது. அப்படி நீங்கள் வைக்கும் பணப்பெட்டி அல்லது பீரோ போன்ற பொருட்களின் மீது வெளிச்சத்தை உண்டாக்க கூடிய வகையில் பல்ப் அல்லது டியூப்லைட்...