ஸ்ரீ கருடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார். இம்மந்திரத்தை, ஒருவர் ஆறு மாதங்கள் கருட மந்திரத்தை உச்சரித்து, அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். கருட மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ண பக்ஷாய தீமஹி தன்னோ கருட ப்ரசோதயாத் விளக்கம் : பரம புருஷனை அறிவோமாக. சுவர்ணத்தைப் போல் ஓளி வீசும், அவன் மீது தியானம் செய்கிறோம். கருட பகவானான அவன் நம்மை காத்து அருள் செய்வானாக.