பொய் இன்றி மெய்யோடு: Poi Indri Meiyodu Nei Kondu Ponaal Lyrics in Tamil பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் இருப்பது காடு வணங்குது நாடு அவனைக் காண – தேவை பண்பாடு அய்யப்பா பூஜைகள் போடு தூய அன்போடு பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் -நல்ல பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள் அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான் பொய் இன்றி அய்யப்பா சரணம் அய்யப்பா (3) Poi Indri Meiyodu Nei Kondu Ponaal Lyrics in Tamil