அக்டோபர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் நாள் ஒன்றுக்கு 5000 தரிசனம் டிக்கெட் வெளியிடப்படுவது வழக்கம். அதில் ரூ. 300 கட்டண சிறப்பு தரிசனம் முன்பதிவு இணையதளத்தில் செய்வதற்கான வசதியை 23.09.2021 (செப்டம்பர் 23) அன்று காலை 9 மணி முதல் திருப்பதி இணையதளத்தில் செய்ய முடியும். அக்டோபர் மாதத்திற்கான இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 24ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான தங்கும் விடுதிக்கான முன்பதிவு எப்போது என்ற அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. கட்டணம் மற்றும் இலவச டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை : Special Entry Darshan And Free Darshan Ticket Online Booking Availability உலகில் அதிக வருமானம் தரும், கோடீஸ்வர கோயிலாக விளங்குகிறது திருமலை திருப்பதி. பலரும் விரும்பி செல்லக்கூடிய இந்த கோயிலுக்கு தற்போதுள்ள கோவிட் - 19 பெருந்தொற்று காரணமாக பகதர்களை முன்பு போல அனுமதிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் கோயில் நிர்வாகம் சார்பில் முன்பதிவு செய்த பக்தர்களை மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து வருகின்றது. ரூ. 300 கட்டண தரிசனம் முன்பதிவு (தினமு...