பாவம் கழுவிடும் பம்பா: Pavam Kalividum Pamba Lyrics in Tamil பாவம் கழுவிடும் பம்பா பாவம் அழித்திடும் பம்பா பாவ நாசினி பம்பா பூரண புண்ணிய நதி நீ பம்பா (பாவம்) புண்ணிய பம்பையில் மூழ்கிக் குளிக்காத பொன் காலை மாலைகள் உண்டோ உன் குளிர் நீரினால் பாவம் போக்காத முன்னோர் நினைவுகள் உண்டோ பம்பே பம்பே பாற்கடல் கூட உனக்குப் பின்பே பம்பா ஸ்நானம் பரமபவித்ரம் நாங்கள் செய்கின்றோம் பரமன் மைந்தன் பந்தள சபையின் உள்ளம் கனிகின்றான் (பாவம்) பழமை பழக்கம்போல் ஐயன் வரும்போது பரிமாற படையல்கள் உண்டோ உன் இதயத்தில் விளக்கொளி ஏற்றாத கார்த்திகை தாரகை உண்டோ பம்பே பம்பே பாற்கடல் கூட உனக்குப்பின்பே பம்பை படையலுக்கு ஐயன் வரணும் என்னுடன் சுவைக்கனும் பம்பை விளக்கைக்கண்டு மகிழ்ந்திட ஐயன் அருள் தரணும்