ஆஞ்சநேயர் மந்திரம்: ஆஞ்சநேயர் என்பவர் இறைவன் இராமனின் பக்தனும், இந்துகளின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். ஆஞ்சநேயர்க்கு மாருதி, அனுமன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒன்று) ஆவர், இவரே ஆஞ்சநேயர்க்கு தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் ஆஞ்சநேயர் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். ஆஞ்சநேயர் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர்.பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு. ஆஞ்சநேயர் மந்திரம் ஆஞ்சநேயர் மந்திரம்:- ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத் ஆஞ்சநேயர் மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதால் பல நன்மைகளை ஆஞ்சநேயர் நமக்கு தருகிறா...