மகரம் ராசி அன்பர்களே : இந்த சார்வரி தமிழ் புது வருடம் குடும்பத்தில் அதிக குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறது. நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும். செலவுகள் கூடும். வரவை விட திடீர் செலவுகள் ஏற்படும். உங்க குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். திருமணம் கைகூடி வரும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர்கல்வி யோகம் கை கூடி வரப்போகிறது. ஏழரை சனி காலம் என்பதால் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள் நிதானமாக இருங்கள். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் கை கூடி வரப்போகிறது.மறைமுக எதிர்ப்புகள் குறையும். உங்க பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தைகளுக்கு கல்வி செலவுகள் தேடி வரும். திட்டமிட்டு செலவு செய்யுங்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். சார்வரி தமிழ் புது வருடம் சந்தோஷங்களை தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. மகரம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் மகர ராசிக்கு அதிர்ஷ்டமான மாதங்கள்: வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மகர ராசிக்காரர்கள் வணங்க வ...